ஈரான் போர் மூன்றாவது வாரமாக நீடிக்கக் கூடிய நிலையில் உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பெரிய மாற்றம் கண்டுள்ளன. இது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் இன்றைய தினம் கணிசமான அளவு தங்கம் விலை குறையும்.
உலக சந்தையில் ஆசிய வர்த்தக நேரங்களில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 5,000 டாலர்கள் என்ற அளவுக்கு கீழே வர்த்தகமானது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 5000 டாலருக்கு கீழ் சென்றுள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4971.30 டாலர்கள் என விலை குறைந்திருக்கிறது. அதே வேளையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 2.23% சரிந்து 79.5 டாலர்களாக வர்த்தகமானது.

ஈரான் போர் தொடங்கிய பிறகு தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உலக சந்தையில் பெருமளவில் சரிந்திருக்கின்றன. ஈரான் போர் காரணமாக ஏற்பட்டிருக்க கூடிய கச்சா எண்ணெய் விலை உயர்வு , இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக மேற்கொண்டு அமெரிக்க மத்திய வங்கி மற்றும் பிற மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு குறைந்து இருக்கிறது. இது தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் குறைவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
ஈரானின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி தீவான கார்க் தீவின் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஈரானும் பதிலுக்கு பல்வேறு அரபு நாடுகளில் இருக்கக்கூடிய எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. மேற்காசியாவில் நிலவும் போர் 5 லிருந்து 6 மாதங்கள் வரை நீடிக்க கூடும் என அமெரிக்க அரசு வட்டாரங்கள் ப்ளூம்பெர்கிற்கு அளித்த தகவலில் கூறியுள்ளன.
எனவே தற்போதைக்கு போர் முடிவுக்கு வருவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. இருதரப்புமே தங்களுக்கு சாதகமான ஒப்பந்தம் அல்லது முடிவு கிடைக்கும் வரை போர் தொடரும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றன. தற்காலிக போர் நிறுத்தம் அல்லது பேச்சுவார்த்தை என எந்த ஒரு விஷயமும் இதுவரை தொடங்கவே இல்லை.
இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்விலேயே இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் அமெரிக்க டாலர் வலுவடைந்து வருகிறது. எனவே வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது. வட்டி குறையாது என்ற நம்பிக்கை வலுவடைந்திருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியை கைவிட்டு வட்டி வருமானம் தரக்கூடிய பத்திரங்களில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். இதன் காரணமாக உலக சந்தையில் தங்கம் விலை குறைந்திருக்கிறது.

வரும் நாட்களிலும் தங்கம் , வெள்ளி விலை சரிவிலேயே இருக்கும் என்கின்றனர் முதலீட்டு துறை நிபுணர்கள். வர்த்தகர்கள் சற்று உயரும் போது விற்பனை செய்வது விலை குறையும் போது வாங்குவது என்ற அணுகுமுறையை கையாளலாம் என கூகின்றனர். என்ரிச் மணி நிறுவனத்தின் பொன்முடி, உலக சந்தையில் தங்கம் விலை 5,050 லிருந்து 5000 டாலர்கள் என்ற அளவுக்குள் ஏறி இறங்கும் என்றும் மேற்கொண்டு அது 4,900 டாலர்கள் வரை சரிவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
ஒருவேளை தங்கம் விலை 5100 டாலரைக் கடந்து விட்டால் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி சென்றுவிடும் என கூறுகிறார். வெள்ளி விலை 76 டாலரி இருந்து 72 டாலருக்குள் ஏறி இறங்கும் என்றும் 80 டாலருக்கும் மேல் உயர்ந்துவிட்டால் மீண்டும் அதன் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார். இருந்தாலும் சில வாரங்களுக்கு விலை திருத்தம் நீடிக்கும் வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது என்கிறார்.உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைகிறது என்றால் இந்தியாவிலும் எம்சிஎக்ஸ் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் தங்கம், வெள்ளியின் விலைகள் குறையும்.எனவே தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சிறந்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications

