Gold: 1980க்கு பின் மீண்டும் நடக்குதே! தங்கத்தில் முதலீடு செய்தவர்களின் நிலை என்ன? எப்போது பவுன்ஸ் பேக் ஆகும்?

தங்கம் விலை ஜனவரி மாதம் தொட்ட உச்ச விலையில் இருந்து சுமார் 32 சதவீதம் குறைந்து, மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனாலும் யாரும் முதலீடு செய்யவில்லை ஏன் தெரியுமா..?

தங்கம் விலை குறைய வட்டி விகித உயர்வு, பணவீக்கம், பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை, ஏஐ முதலீட்டில் யூ-டர்ன் என பல காரணங்கள் இருந்தாலும், தங்கத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்குவதற்கு மிக முக்கியமான காரணம் தங்கம் விலை எந்த சரிவில் இருந்து எப்போது பவுன்ஸ் பேக் ஆகும் என்பது தெரியாமல் இருப்பது தான்.

Gold: 1980க்கு பின் மீண்டும் நடக்குதே! தங்கத்தில் முதலீடு செய்தவர்களின் நிலை என்ன? எப்போது பவுன்ஸ் பேக் ஆகும்?

சொல்லப்போனால் 1980க்கு பின்பு தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது. இத்தகைய சரிவில் இருந்து மீண்டு வருவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பதைத் தாண்டி, வரலாற்றுத் தரவுகள் இன்னும் பல உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தங்கம் விலை

Gold Price எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடியும் போது 4 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்து 1,21,949 ரூபாயாக உள்ளது. ரீடைல் சந்தையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ப்ரீமீயம் விலை குறைந்து வெறும் 12,508 ரூபாய் அளவிலேயே உள்ளது.

இந்த நிலையில் பெரும்பாலான முதலீட்டாளர்களின் கேள்வி தங்கம் விலை எப்போது மீண்டும் உயரும் என்பது தான்.

பவுன்ஸ்பேக் காலம்

எந்தொரு முதலீட்டு சொத்தாக இருந்தாலும், ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும், ஆனால் 30 - 40 சதவீத சரிவு என்பது மிகவும் முக்கியமானது, கவனிக்க கூடியதாகும்.

உதாரணமாக 1980ல் தங்கம் விலை அதன் உச்ச விலையில் இருந்து 40 சதவீதம் குறைந்தது, இந்த நிலையை மீண்டும் எட்டுவதற்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டது, அதாவது 1989ல் தான் மீண்டும் எட்டியது.

இதேபோல் 1996 உச்சத்தில் இருந்து சரிந்த போது 6 வருடத்திற்குப் பின்பு மீண்டும் பழைய நிலையை அடைந்தது, இதோடு 2012 உச்சத்தில் இருந்து விழுந்த போது மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்ப 6.5 வருடம் தேவைப்பட்டது.

40 சதவீத சரிவு நடந்திருக்கு

தங்கம் விலையில் ஏற்படும் பெரும் சரிவு என்பது அரிதானது கிடையாது, 1980 முதல் சுமார் 11 முறை 25 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது, இதில் 4 முறை 40 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.

இதேபோல் தங்கம் விலையின் சரிவு காலம் என்பது தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதையும் பார்க்கிறோம், அதாவது 1987-93 வரையிலான காலகட்டத்தில் சுமார் 5.2 ஆண்டுகள் சரிவு தொடர்ந்தது. இதேபோல் 2011-15 காலகட்டத்தில் சுமார் 4.2 ஆண்டுகள் விலை சரிந்தது. இந்த 2026ல் ஜனவரி மாதம் தொடங்கிய தற்போதைய சரிவு சுமார் 9.6 மாதங்களாக நீடிக்கிறது.

எவ்வளவு உயரும்..?

அடுத்தபடியாக பவுன்ஸ் பேக் அளவீட்டைப் பார்க்கும் போதும் தங்கம் விலை ஒவ்வொரு முறையும் 25 சதவீதம் சரியும் போதும் குறைந்தபட்சம் 25 சதவீதம் உயர்ந்து மொத்த இழப்பையும் சரி செய்து வருகிறது. அதிகப்படியாக 76.4 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, மேலும் தங்கம் விலை அடிமட்டத்தைத் தொட்ட 1 ஆண்டுக்குள் அதிகபட்சமாகச் சராசரி 33% உயர்வும், 2 ஆண்டுகளில் 59% உயர்வும் பதிவு செய்துள்ளது.

வாய்ப்புகள் குறைவு தானா..?

கடந்த 40 -46 வருடத் தரவுகளை ஆய்வு செய்து பார்க்கும் போது தங்கம் விலை தங்கம் சரிந்த பிறகு உடனடியாக பழைய விலைக்குத் திரும்பும் என்பதற்கு எவ்விதமான உத்தரவாதம் இல்லை, பொருளாதார நிலை, முதலீட்டு தேவைகளின் மாற்றம், மத்திய வங்கிகளின் முடிவுகள் தான் தங்கம் விலையை படிப்படியாக உயர்த்தி வருகிறது. இந்த 46 வருடத்தில் பல முறை நீண்ட கால அடிப்படையில் தான் உயர்ந்துள்ளது.

நீண்ட கால முதலீட்டு தீர்வு

இதனால் தங்கத்தில் முதலீடு செய்வோர் இந்த நீண்ட கால அடிப்படையில் காத்திருப்பது அவசியம். இதேபோல் தங்கம் - வெள்ளி விலை அதிகப்படியாக எவ்வளவு குறையும் என்பதைக் கணக்கிடுவது கடினம், தொடர்ந்து மாறி வரும் போர் அச்சங்கள், முதலீட்டாளர்களின் முடிவு, மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகள் ஆகியவற்றின் மூலம் Bottom விலை கணக்கிடுவது கடினம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+