தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தொடங்கி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரை தங்கம், வெள்ளி விலை தான் மக்கள் மத்தியில் ஹாட்டான ஒரு டாபிக்காக இருந்தது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. தங்கத்தை விட வேகமாக போட்டி போட்டுக் கொண்டு வெள்ளி விலை உயர்ந்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் முதன்முறையாக 1 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை கடந்தது. ஜனவரி மாதத்தில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை ஜனவரி 29ஆம் தேதி அன்று வரலாற்றிலேயே தன்னுடைய உச்ச பட்ச விலையாக ஒரு கிராம் 16,800 ரூபாய் என்றும் ஒரு சவரன் 1,34,400 ரூபாய் என்ற விலையையும் எட்டியது.

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! மேலும் விலை குறையுமா?

திடீரென தங்கம் விலை இவ்வளவு உயரும் என மக்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான் இனி தங்கத்தை மறந்து விட வேண்டியதுதான் என மக்கள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் தான் பிப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாக தங்கம் விலை குறையத் தொடங்கியது. பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று ஈரான் போர் தொடங்கியது. வழக்கமாக போர் நடந்தாலே தங்கத்தின் விலை தான் உயரும் ஆனால் ஈரான் போர் தங்கத் தங்கச் சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது.

ஈரான் போர் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி விட்டது , கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் அமெரிக்க டாலருக்கான டிமாண்ட் அதிகரித்து அது வலுப்பெற தொடங்கியது. உலகிலேயே வலிமையான ஒரு நாணயமாக மீண்டும் தன்னை தக்க வைத்து கொண்டது டாலர். இதனால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி முதலீடுகளை விடுத்து அமெரிக்க பத்திரங்கள், கச்சா எண்ணெய் மற்றும் டாலரில் அதிக முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர்.

இதுதான் தங்கம், வெள்ளி விலை குறைவதற்கு முக்கிய காரணம். எப்போதெல்லாம் உலக சந்தையில் டாலர் வலுவடைகிறதோ அப்போதெல்லாம் தங்கம் விலை குறையும். பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் போர் தொடங்கியது. இதனை அடுத்து பிப்ரவரி 28-ம் தேதியும் மார்ச் 1 ஆம் தேதியும் சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்தது.

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! மேலும் விலை குறையுமா?

மார்ச் 1ஆம் தேதி அன்று பார்த்தால் சென்னையில் தங்கத்தின் விலை 15,775 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,26,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதன் பிறகு வந்த பெரும்பாலான வர்த்தக நாட்களிலும் தங்கம் விலை சரிவிலேயே தான் இருக்கிறது. சென்னையில் இன்றைய தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,620 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையை எட்டி இருக்கிறது. ஒரு சவரன் விலை 1,08,960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Also Read

இதன்படி மார்ச் ஒன்றாம் தேதி நிலவரத்துடன் பார்த்தால் சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 2155 ரூபாய் விலை சரிவடைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 17,240 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதாவது 13.67% தங்கம் விலை குறைந்திருக்கிறது. வரலாற்று உச்சபட்ச விலையுடன் ஒப்பிட்டால் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 25,470 ரூபாய் சரிவை கண்டுள்ளது. சுமார் 18% விலை குறைந்துள்ளது.

ஆபரண தங்கம் தான் சாமானிய மக்கள் வாங்க கூடியது அதன் விலை சரிகிறது என்றால் அத்துடன் நாம் செலுத்தும் செய்கூலி சேதாரத்தின் விலைகளும் சரியும். உதாரணமாக மார்ச் 1ஆம் தேதி அன்று 1 சவரன் செயின் வாங்கி இருந்தால் செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்த்து 1,45,000 ரூபாய் கொடுத்திருப்போம் அதுவே இன்றைய தினம் அதே ஒரு சவரன் செயினுக்கு 1,25,000 ரூபாய் கொடுத்தால் போதும் அதாவது 19,800 ரூபாய் வரை நமக்கு சேமிப்பு.

Recommended For You

கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பண வீக்க அழுத்தம் காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைக்கவில்லை மற்ற நாடுகளின் வங்கிகளும் இதே முடிவினை தான் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலை குறைய காரணமாகியுள்ளது. சரி இந்த விலை குறைவு அப்படியே நீடிக்குமா தங்கம் விலை ஒரு சவரன் மீண்டும் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லுமா என்பது தான் பெரும்பாலான மக்களின் கேள்வி. ஈரான் போர் தீவிரமடைந்து இன்னும் இன்னும் கச்சா எண்ணெய் விலை உயர்கிறது என்றால் அது சாத்தியமே. ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வை சரி செய்ய வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருப்பதால் இந்த வாரத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுத்து விலையை சரி செய்ய அமெரிக்க அரசும் உலக நாடுகளும் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. எனவே கச்சா எண்ணேய் விலை குறைந்தால் மீண்டும் தங்கம், விலை உயரும். இருந்தாலும் அடுத்த சில வாரங்களுக்கு பெரிய விலை உயர்வு இருக்காது என்றே கணிக்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+