செப்டம்பர் மாதத்திலேயே முதன்முறையாக தொடர்ந்து 4 நாட்கள் தங்கம் விலை குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. தங்கம் விலையில் இந்த வாரம் நடந்த மேஜிக் என்ன, இன்றைய தினம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆபரண தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 135 ரூபாய் விலை சரிந்து 14,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1080 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,12,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை இந்த வாரத்தில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விலை சரிந்துள்ளது. திங்கள்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை குறைந்த தங்கம் செவ்வாய் அன்று 85 ரூபாய் சரிந்தது. நேற்று புதன் கிழமை ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்த நிலையில் இன்று 135 ரூபாய் குறைந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரத்தில் இந்த 4 நாட்களில் மட்டும் ஆபரண 285 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,280 ரூபாயும் விலை சரிவை கண்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை மாதங்களில் விலை குறைந்த தங்கம் ஆகஸ்டில் சற்றே ஏற்றம் கண்டது. செப்டம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஒரு ஏறுவது மறுநாள் சரிவது என ஏற்ற இறக்கமாகவே இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் தொடர்ச்சியாக விலை சரிந்து வருகிறது. இது இப்படியே நீடிக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு.
24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 147 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,273 ரூபாய்க்கும் 10 கிராம் 1,52,730 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 94,160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையும் இன்று சரிவை கண்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ 5000 ரூபாய் விலை குறைந்து 2.50 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகிய மூன்றும் தான் தங்கம், வெள்ளி விலைகளை நிர்ணயம் செய்யும் காரணிகளாக உள்ளன.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 4,287 டாலராக உள்ளது. அதே போல எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,51,080 ரூபாயாக வர்த்தகமாகிவருகிறது. இந்த இரண்டு சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


