தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸுக்கு 1840 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்ட நிலையில், இன்றும் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே தடுமாற்றத்தில் காணப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமையன்று வெளியான தொழிலாளர் சந்தை குறித்தான தரவானது, வரவிருக்கும் கூட்டத்திலும் மத்திய வங்கியினை வட்டி அதிகரிப்பு செய்ய ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக இதன் காரணமாக டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தை என பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வட்டியில்லா முதலீடு?
அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. இதற்கிடையில் பத்திர சந்தையும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக தங்கம் விலையானது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது கூட்டம்?
வரவிருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் என்பது மார்ச் 21 - 22 அன்று நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு வட்டியில்லா முதலீடான தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். பெடரல் ரிசர்வ் வங்கியின் இந்த போக்கானது பணவீக்கம் என்பது 2% இலக்கினை அடையும் வரையில் இருக்கலாம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது.
சீனா பொருளாதாரம்
தொடர்ந்து சீனாவின் பொருளாதார வளர்ச்சி என்பது தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், இதுவும் தங்கத்தின் தேவையினை நீண்டகால நோக்கில் ஊக்குவிக்க காரணமாக அமையலாம். இது தங்கம் விலைக்கு நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம். மொத்தத்தில் தங்கத்தில் தேவையானது முதலீட்டு ரீதியாகவும், பிசிகல் தங்கமாகவும் அதிகரிக்கலாம்.
இந்தியாவிலும் தங்கத்தின் தேவை என்பது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய பிரச்சனைகள்
அமெரிக்கா - சீனா பிரச்சனை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை என பலவும் வரவிருக்கும் ஜி20 நாடுகளின் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். இவையும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இதுவும் தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம்.
இதற்கிடையில் டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.85 அதிகரித்து, 1844.25 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.77% அதிகரித்து, 21.062 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 64 ரூபாய் அதிகரித்து, 55,803 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும் பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 459 ரூபாய் அதிகரித்து, 63,715 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 5240 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 41,920 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. க்
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 5716 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து, 57,160 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது இன்று கிராமுக்கு 70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 70,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.இதுவரையில் வெள்ளி விலையில் மாற்றம் காணவில்லை.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications