ஈரான் போர் மற்றும் உலக அளவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்க்க, உலகம் முழுவதும் மக்கள் தங்கள் பணத்தை தங்கத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் முதலீடு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலையில் மந்த நிலை ஏற்பட்டாலும், இது தற்காலிகமானது என்றும், இதன் விலைக்கு புதிய அடிப்படை நிலையை உருவாக்கி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதேவேளையில் தங்கம் பைனான்சியல் சூப்பர்பவர் என கருதுகின்றனர்.

காலம் காலமாக தங்கம் நெருக்கடி காலங்களில் மிகவும் பாதுகாப்பான சொத்தாக கருதப்படுகிறது. இதனால் தங்க விலை வேகமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் உலகில் உள்ள அனைத்து தங்கத்தின் மொத்த மதிப்பு தற்போது 30 டிரில்லியன் டாலர் முதல் 35 டிரில்லியன் டாலர் வரை சென்றுள்ளது.
தற்போது தங்கம் சில தடுமாற்றத்தை சந்தித்தாலும், பொருளாதாரத்தில் மாற்றங்கள் நடக்கும் போது தங்கம் மீண்டும் முக்கிய சொத்தாக மாறும் என்பதே பொருளாதார வல்லுனர்களின் முக்கிய கருத்தாக உள்ளது. இதேவேளையில் உலகளவில் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை டோக்கனாக மாற்றும் நடைமுறையும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூமிக்கு மேல் இருக்கும் தங்கத்தின் மதிப்பு 35 டிரில்லியன் டாலர் எனில் இந்தியாவின் பொருளாதாரம் (GDP) (3-4 டிரில்லியன் டாலர்) மற்றும் பிரிட்டன் பொருளாதாரம் (3 டிரில்லியன் டாலர்) இரண்டையும் சேர்த்தாலும் தங்கத்தின் மதிப்பை அடைய முடியாது என்பதே உண்மை.
தங்கத்தின் மதிப்பு என்பது இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன் பொருளாதாரத்தை விட பல மடங்கு அதிகம். இதனால் பொருளாதார நிபுணர்கள் தங்கத்தை ஒரு "பைனான்சியல் சூப்பர்பவர்" என்று அழைக்கின்றனர்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு
கடந்த 13 ஆண்டுகளாக தங்கம் ஒரு குறிப்பிட்ட விலை வரம்புக்குள் தான் நகர்ந்து கொண்டிருந்தது. இப்போது அந்த நிலையை தாண்டி புதிய உயர்வு தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு 1972 மற்றும் 2005 காலகட்டங்களிலும் இதுபோன்ற பெரிய உயர்வு தொடங்கி 6-8 ஆண்டுகள் தொடர்ந்து விலை அதிகரித்தது.
பங்குச் சந்தியை விட தங்கம் சிறப்பு
கடந்த ஒரு தசாப்தமாக தங்கம் அதிக மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது தங்கம் பங்குகள் (stocks) மற்றும் பாரம்பரிய 60/40 முதலீட்டு முறை (60% stocks + 40% bonds) ஆகியவற்றை விட அதிக வருமானம் தர ஆரம்பித்துள்ளது. இதனால் முதலீட்டு சந்தையில் புதிய மாற்றத்தை எதிர்நோக்க உள்ளது.
முதலீட்டாளர்கள் தங்கத்தை ஏன் அதிகம் வாங்குகின்றனர்?
மத்திய கிழக்கில் நடைபெறும் போர், எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க அச்சம், உலக சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில் பாதுகாப்பான, நீண்ட கால லாபம் நோக்கத்திற்காக தங்கத்தில் அதிகளவில் முதலீடு குவிகின்றது.
இத்தகைய ஆபத்து காலங்களில் பங்குகள் அல்லது நாணயங்கள் மீது நம்பிக்கை குறைகிறது. தங்கம் தனது மதிப்பை பெரும்பாலும் தக்க வைத்துக் கொள்வதால், மக்கள் அதை நோக்கி செல்கின்றனர்.
தங்கம் விலையின் எதிர்காலம்
தங்க விலை இனி உயருமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு நிபுணர்களின் கருத்துகள் வேறுபடுகின்றன. போர் குறைந்து உலக பொருளாதாரம் மேம்பட்டால், வட்டி விகிதங்கள் உயர்ந்தால் தங்க விலை குறையலாம்.
ஆனால் போர் மற்றும் புவிசார் பதற்றங்கள் தொடர்ந்தால், மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது அதிகரித்தால், காகித நாணயங்கள் மீதான நம்பிக்கை குறைந்தால் தங்கம் விலை உயரும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!



Click it and Unblock the Notifications