1983-க்குப் பிறகு பெரிய சரிவில் தங்கம் விலை! ஆபரணத் தங்கத்துக்கு என்னாச்சு?

முதலில் சர்வதேச சந்தையும், அதன் பிறகு ஆபரணத் தங்கத்தின் விலையையும் பார்ப்போம். நியூ யார்க் சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை 2.9 % சரிந்து, 1,529.83 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த சரிவால் கடந்த வாரம் ஸ்பாட் தங்கத்தின் விலை 8.6 % சரிந்து இருக்கிறது. இது கடந்த மார்ச் 1983-க்குப் பிறகு நடந்த மிகப் பெரிய சரிவு என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

இந்தியாவில் கூட இந்த சரிவு, மிகப் பெரிய அளவில் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.

தங்கம் ஃப்யூச்சர்ஸ்

தங்கம் ஃப்யூச்சர்ஸ்

இந்தியாவின் எம் சி எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்துக்கான ஏப்ரல் 2020 மாத ஃப்யூச்சர் காண்டிராக்ட் விலை, நேற்று மார்ச் 13, 2020, வெள்ளிக் கிழமை, ஒரே நாளில் 1,790 ரூபாய் சரிந்து இருக்கிறது. அதாவது 4.24 சதவிகிதம் விலை சரிந்து இருக்கிறது.

செம அடி

செம அடி

கடந்த மார்ச் 06, 2020 அன்று இதே 10 கிராம் தங்கத்துக்கான ஏப்ரல் 2020 காண்டிராக்ட் விலை 44,961 ரூபாயைத் தொட்டது. ஆக கடந்த 8 நாளில் இந்த ஏப்ரல் 2020 காண்டிராக்ட் சுமாராக ,4500 ரூபாய் சரிந்து தற்போது 40,416 ரூபாய்க்கு நேற்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சரி ஆபரணத் தங்க விலைக்கு வருவோம்.

இன்றைய விலை

இன்றைய விலை

இன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 43,780 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40,130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை சரிந்து கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

24 கேரட் 10 கிராம்

24 கேரட் 10 கிராம்

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாற்று உச்சமாக கடந்த மார்ச் 06, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 46,160-க்கு விற்பனை ஆனது. இந்த உச்ச விலையில் இருந்து இன்று 43,780 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது தங்கம். ஆக 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை, கடந்த 8 நாட்களில் 2,380 ரூபாய் சரிந்து இருக்கிறது.

22 கேரட் 10 கிராம்

22 கேரட் 10 கிராம்

அதே போல, சென்னையில் கடந்த மார்ச் 06, 2020 அன்று 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 42,310-க்கு விற்பனை ஆனது. இந்த உச்ச விலையில் இருந்து இன்று 40,130 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது தங்கம். ஆக 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 8 நாட்களில் 2,180 ரூபாய் சரிந்து இருக்கிறது.

விலை போக்கு

விலை போக்கு

கடந்த மார்ச் 06, 2020 அன்று தங்கத்தின் விலை தன் உச்சத்தை தொட்ட பின் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்களைக் கண்டன. ஆனால் மார்ச் 10, 2020 முதல் இன்று மார்ச் 14, 2020 வரை தொடர்ந்து தங்கம் விலை சரிந்து கொண்டு தான் இருக்கிறது என்பது தான் இதில் ஹைலைட் செய்ய வேண்டிய விஷயமாக இருக்கிறது. சரி எப்படி தங்கம் விலை சரிந்தது. இதற்கான காரணம் என்ன..? வாருங்கள் பார்ப்போம்.

காரணம் 1

காரணம் 1

கடந்த சில நாட்களாக அமெரிக்கா உட்பட, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் எல்லாமே பலத்த அடி வாங்கிக் கொண்டு இருந்தன. ஆனால் நேற்று மார்ச் 13, 2020 அன்று, பங்குச் சந்தைகளில் பலதும் பிரமாதமான ஏற்றத்தைக் கண்டு இருக்கின்றன. அமெரிக்காவின் நாஸ்டாக் 9% ஏற்றம், இங்கிலாந்தின் எஃப் டி எஸ் இ 2.46 % ஏற்றம், பிரான்சின் சி ஏ சி 1.83 % ஏற்றம், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 0.36 % ஏற்றம், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 1.26 % ஏற்றம்கண்டு இருக்கின்றன.

காரணம் 1.1

காரணம் 1.1

இதனால் தங்கத்தின் வந்த லாபம் போதும் என பலரும் தங்கத்தின் செய்திருந்த முதலீடுகளை வெளியே எடுத்து இருக்கிறார்கள். எனவே இந்த இரண்டு காரணங்களால், ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்ட்கள். இன்னொரு காரணம் டாலர் பலவீனம்.

காரணம் 2

காரணம் 2

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் 74.40 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் இன்று கொஞ்சம் கூல் டவுன் ஆகி, இப்போது 73.9 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் சந்தையில் கொரோனா பயம் இன்னும் குறையவில்லை, விரைவில் அதன் அதன் தாக்கம் அதிகரிக்கலாம் எனப்தையும் கவனத்தில் கொள்ளவும்.

இப்ப வாங்கலாமா

இப்ப வாங்கலாமா

கடந்த மூன்று மாதங்களில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலையாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மார்ச் 04, 2020-க்குப் பின் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 45,000 ரூபாய்க்குக் கீழ் வருவது இன்று தான் இரண்டாவது முறை. கொரோனா வைரஸ் பயத்தால் இன்னும் தங்கம் விலை ஏறிவிடும் என்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாங்கிவிடலாம்.

காத்திருப்போம்

காத்திருப்போம்

அதெல்லாம் இல்லிங்க, தங்கம் ஃப்யூச்சர்ஸ் & சர்வதேச தங்கம் விலை எல்லாம் சரிகிறது. இந்தியாவில் ஏப்ரல் மாத காண்டிராக்ட் விலையே ஒரே நாளில் 4.24 % சரிந்து இருக்கிறது. ஜூன் காண்டிராக்ட் 4.68 % சரிவு, ஆகஸ்ட் 2020 காண்டிராக்ட் 7 % சரிவு எனவே இன்னும் தங்கம் விலை குறையலாம் என்பவர்கள், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 42,500 அல்லது 40,000 ரூபாய்க்கு கீழ் வரும் வரை காத்திருக்கவும்.

யார் என்ன சொன்னாலும் முடிவு உங்களுடையது தானே. தீர ஆலோசித்து நல்ல முடிவாக எடுங்கள். குறைந்த விலையில் தங்கம் கிடைக்க வாழ்த்துக்கள்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+