இந்தியர்களையும், தங்கத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது என்பதை நிரூபிக்க ஒரு வீக்என்ட் நாளில் தங்க நகை கடை பக்கம் போனால் தெரிந்துவிடும். தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருக்கும் போதும் மக்கள் தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்க நகைகளை வாங்கினாலும், 10-30 சதவீதம் பேர் புதிதாக தங்கத்தை வாங்கி வருகின்றனர்.
மறுபுறம் இளம் தலைமுறையினர் சமீப காலமாக தங்கத்தை நேரடியாக வாங்காமல் ETF வாயிலாக அதிகளவில் வாங்கி வருகின்றனர். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில் இதன் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும், ஆனால் எதிர்பாராத விதமாக கோல்டு ஈடிஎப் மீதான முதலீடு நவம்பர் மாதம் 55 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..?

இந்தியாவில் கோல்டு ஈடிஎப் பண்டுகளில் நவம்பர் மாதத்தில் 379 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது கிட்டத்தட்ட சுமார் ரூ.3,200 கோடி முதலீடுகள் குவிந்துள்ளது. ஆனால் இது அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 55 சதவீதம் குறைவாகும்.
ஒரு பக்கம் 55 சதவீதம் குறைந்தது அதிர்ச்சி கொடுத்தாலும், தொடர்ச்சியாக 6வது மாதமாக இந்தியர்கள் தங்க ETFகளை வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது. FII முதலீடுகளை கணக்கிடுவது போல் நெட் பையர்ஸ், நெட் செல்லர்ஸ் என்பது போல் பார்த்தால் இந்தியாவில் கோல்டு ETF மீதான முதலீடுகள் தொடர்ந்து 6 மாதங்களாக விற்பதை காட்டிலும், வாங்குவது அதிகமாக உள்ளது.
2025 ஆண்டில் மட்டும் இந்திய தங்க ETFகளில் மொத்தம் 3.43 பில்லியன் டாலர், ரூபாய் மதிப்பில் இது கிட்டத்தட்ட ரூ.29,000 கோடி அளவிலான நிகர முதலீடு வந்துள்ளது. இது வருடாந்திர அளவில் பதிவான அதிகப்படியான தொகையாகும். இதன் விளைவாக இந்திய தங்க ETFகளின் மொத்த சொத்து மதிப்பு 12.2 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
2024ல் வெறும் 1.29 பில்லியன் டாலரும், 2023ல் 310 மில்லியன் டாலரும், 2022ல் 33 மில்லியன் டாலராக மட்டுமே இருந்த கோல்டு ஈடிஎப் முதலீடு 2025 3.43 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச், மே தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் முதலீட்டாளர்கள் தங்க ETFகளில் நெட் பையர்ஸ் ஆகவே இருந்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை..?
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 911 மில்லியன் டாலரும், அக்டோபர் மாதத்தில் 849 மில்லியன் டாலரும் கோல்டு ஈடிஎப்-ல் முதலீடு செய்யப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் இந்த முதலீடு 378.70 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. இந்த 55 சதவீத சரிவு தான் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது.
நவம்பர் மாதத்தில் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளாவிய தங்க ETF முதலீடுகள் குறைந்ததுள்ளது. உதாரணமாக வட அமெரிக்காவில் நவம்பர் மாதம் 1.1 பில்லியன் டாலர் மட்டுமே வந்ததுள்ளது, அக்டோபரில் 6.5 பில்லியன் டாலராக இருந்தது இதன் மூலம் 83 சதவீதம் சரிவு பதிவாகியுள்ளது.
இதுவே ஐரோப்பாவில் நவம்பர் மாதம் 1 பில்லியன் டாலர் முதலீடுகள் கோல்டு ஈடிஎப் மீது முதலீடு குவிந்த நிலையில் - அக்டோபரில் 4.4 பில்லியன் டாலர் வெளியேறியிருந்தது, செப்டம்பர் மாதம் இது தலைகீழாக மாறியுள்ளது.
இந்தியாவைத் தவிர்த்த ஆசிய நாடுகளில் நவம்பர் மாதத்தில் 3.1 பில்லியன் டாலர் முதலீடு பதிவான நிலையில், அக்டோபர் மாதத்தை விடவும் 50 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.
ஏன் நவம்பரில் முதலீடு மந்தமானது?
நவம்பர் தொடக்கத்தில் அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருப்பதாக வந்த தகவல்களாலும், அந்நாட்டு மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முழு விபர அறிக்கையில் வெளியான hawkish கருத்துகள் டிசம்பர் கூட்டத்தில் வட்டி விகிதம் வராது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் தங்கத்தின் மீதான ஆர்வம் சற்று குறைந்தது.
அதே சமயம் உக்ரைன் போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதால் பாதுகாப்பு சொத்தாக கருதப்பட்ட தங்கத்தின் தேவை குறைத்து முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கியதுவத்தை இழந்தது. இந்த இரு காரணங்களும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் தங்க ETF வாங்குவதில் குறைந்தது.
ஆயினும் நீண்டகால அடிப்படையில் தங்கம் மீதான நம்பிக்கை முதலீட்டாளர்கள்- சந்தை நிபுணர்கள் மத்தியில் இன்னும் வலுவாகவே உள்ளது. ஆனால் 2025ஆம் ஆண்டில் ஏற்பட்ட 50-60 சதவீத உயர்வு 2026ல் இருக்காது என்பது பரவலான கருத்தாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?



Click it and Unblock the Notifications