கடந்த சில மாதங்களாகவே தங்கத்தினை விட அதிகம் லாபம் தரும் முதலீடு என்று, ஒன்று நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு அனுதினமும் புதிய உச்சத்தினை கண்டு வந்தது.
சொல்லப்போனால் உலகின் பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் நிறுவனத்தில் கூட, தங்கம் சார்ந்த பங்குகளில் முதலீடுகளை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்தளவுக்கு இந்த கொரோனா பங்கு சந்தையை புரட்டி போட்டு, தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
கோல்டு இடிஎஃப்
இந்த வெறும் தங்கத்தில் மட்டும் அல்ல, தங்கம் சார்ந்த முதலீடுகளிலும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோல்டு இடிஎஃப்களில் முதலீடானது வலுவான வளர்ச்சி கண்டுள்ளது எனலாம். இதன் மூலம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 921 கோடி வருவாயினை கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டினை விட 86% அதிகரித்துள்ளது.
இடிஎஃப்பில் முதலீடு
கொரோனா தாக்கத்தின் மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்களது முதலீடுகளை தங்கத்தில் செய்து வருகின்றனர். AMFI அறிக்கையின் படி, இந்த சொத்து நிர்வாகத்தின் கீழ் ஜூலை 31 நிலவரப்படி, 12,941 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 19% அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு புகலிடம்
ஆக கால காலமாக பாதுகாப்பு புகலிடமாக கருதப்படும் தங்கமே, தற்போது வரையில் இந்த ஆணடில் சிறந்ததொரு லாபம் கொடுக்கும் திட்டமாக இருந்துள்ளது. அதோடு சிறந்த முதலீடுகளை ஒரு அம்சமாகவும் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 202 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரியில் 1,483 கோடி ரூபாய் முதலீடும் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் மொத்த முதலீடு
அதேசமயம் மார்ச் மாதத்தில் 195 கோடி ரூபாயினை முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். ஆனால் ஏப்ரல் மாதத்தில் 731 கோடி ரூபாய் முதலீடும், மே மாதத்தில் 815 கோடி ரூபாய் முதலீடும் செய்யப்பட்டுள்ளது. சொல்லப்போனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 4,249 கோடி ரூபாய் முதலீட்டுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறந்த முதலீடு
அதோடு தொடர்ந்து நடப்பு ஆண்டில் தங்கமானது லாபம் கொடுக்க கூடிய ஒரு அம்சமாகவே இருக்கும் என்று நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதற்கு காரணம் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலை, பெரும் கொரோனா வைரஸ் தொற்றுகள், இதனால் பங்கு சந்தையில் எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும் என்பதை கணிக்க முடியாத நிலை, இப்படி பல காரணங்களால் தொடர்ந்து தங்கம் சிறந்த முதலீடாகவே பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications