சென்னை: தங்கம் காலா காலத்திற்கும் முதலீட்டாளர்களை ஏமாற்றாத ஒரு முதலீடு என கூறலாம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தங்கத்தில் செய்யும் முதலீடுகள் வளர்ச்சியில் தான் இருக்கின்றன. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து தான் வருகிறது.
சாமானிய மக்களால் தங்கத்தில் ஒரு சவரனுக்கு நகை வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தது 80 ஆயிரம் ரூபாயை செலவிட வேண்டி இருக்கிறது. ஆனால் தங்கம் என்றாலே நாணயமாகவோ நகையாகவோ தான் வாங்கி வைக்க வேண்டும் என கிடையாது. தங்கத்தை நாம் குறைந்த பணத்திலும் வாங்க முடியும். அது எப்படி என்பதை தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள்: இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களை தேர்வு செய்யலாம். தங்கத்தை வாங்க வேண்டும் ஆனால் என்னிடம் குறைந்த பணமே இருக்கிறது என கூறுபவர்கள் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தையில் இவை வர்த்தகம் செய்யப்படுகின்றன .
பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய பெயரில் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. நம்முடைய டீமேட் கணக்குகள் வாயிலாக ஸெரோதா போன்ற செயலிகளில் கோல்ட் ஈடிஎஃப்-களில் முதலீடு செய்ய முடியும். ஒவ்வொரு யூனிட்டும் ஒவ்வொரு கிராமை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இவை வடிவமைக்கப் பட்டுள்ளன.
குறைந்தபட்சம் 80 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்யலாம் . தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் காண்பதற்கு ஏற்ப இந்த ஈடிஎஃப்களின் மதிப்பும் ஏற்றும் இறக்கம் காணும் . ஆனால் இதிலிருந்து நமக்கு கிடைக்க கூடிய வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். பங்குச்சந்தை நடைபெறக்கூடிய நேரத்தில் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் இதனை விற்பனை செய்து பணமாக்கிக் கொள்ளலாம் ,. உடனடியாக பணமானது நம்முடைய அக்கவுண்டுக்கு வந்துவிடும். எனவே இதனை விற்பனை செய்து பணமாக்குவது என்பது எளிமையானதாக இருக்கிறது. இதில் கூடுதலாக மேலாண்மை கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த நேரிடலாம்.

டிஜிட்டல் தங்கம்: தங்கத்தை நகையாகவும் நாணயமாகவும் வாங்கி வீட்டில் வைக்கும் போது அதை நாம் பாதுகாப்பதற்கு என்றே தனியாக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க கூடிய வாய்ப்பு வந்து அந்த கவலைகளை தீர்த்து இருக்கிற.து எளிதாக நாம் மொபைல் செயலிகள் வாயிலாகவே வாங்கிவிட முடியும் . குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுடைய ஆன்லைன் செயலிகள் வாயிலாகவே டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்கின்றன.
நாம் எளிதாக அந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்கிக் கொள்ள முடியும். டிஜிட்டல் தங்கத்தை பொறுத்தவரை டிஜிட்டல் முறையில் நம் தங்கம் இருக்கும் வேண்டுமென்றால் அதனை விற்று பணமாக்கலாம் அல்லது பிசிக்கல் தங்கமாக நமக்கு டெலிவரி செய்யும் படி அறிவுறுத்தலாம். இதிலும் மேலாண்மை கட்டணம், ஸ்டோரேஜ் கட்டணம் ஆகியவற்றை நாம் செலுத்த வேண்டி இருக்கும். 500 ரூபாய் முதலே இதில் தங்கம் வாங்க முடியும்.
ஆனால் இது செபி அல்லது ஆர்பிஐ-ஆல் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு கிடையாது என்பதால் திடீரென அந்த செயலி மூடப்பட்டு விட்டால் நம்முடைய பணம் பறிபோவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுதான் டிஜிட்டல் தங்கத்தில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சிக்கல். ஆனால் சிறிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என எதிர்பார்த்தவர்களுக்கு இவை மிகச் சிறந்த ஒரு வாய்ப்பாக அமையும்.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?



Click it and Unblock the Notifications