Gold Rate: உலகளவில் 24% விலை சரிந்த தங்கம்.. இந்தியாவில் 21% மட்டுமே குறைந்தது ஏன்? மீதமுள்ள 3% எங்க போச்சு?

உலக சந்தையில் தங்கம் விலை வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து 24% வரை சரிந்துள்ளது. உலக சந்தையில் தங்கம் விலை ஏறும் போது இந்தியாவிலும் விலை ஏற்றம் காண்கிறது, ஆனால் விலை குறையும் போது மட்டுமே உலக சந்தையை விட குறைந்த சதவீதத்திலேயே விலை குறைகிறது. இதன் காரணம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

உலக சந்தையில் கடந்த ஜனவரி 29, 2026 அன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 5,379 அமெரிக்க டாலர் என்ற வரலாற்று சாதனை உச்சத்தை தொட்டது. ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் ஸ்பாட் கோல்ட் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து 4,068.71 டாலர் என்ற நிலைக்கு வந்துள்ளது. அதாவது, சர்வதேச அளவில் தங்கம் விலை அதன் உச்சத்திலிருந்து சுமார் 24% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார விதிகளின்படி, ஒரு பொருள் தனது அதிகபட்ச உச்சத்திலிருந்து 20% அல்லது அதற்கு மேல் வீழ்ச்சியடைந்தால் அது Bear Market எனப்படும் கடுமையான மந்தநிலைக்குள் நுழைந்ததாக கருதப்படும்.

Gold Rate: உலகளவில் 24% விலை சரிந்த தங்கம்.. இந்தியாவில் 21% மட்டுமே குறைந்தது ஏன்? மீதமுள்ள 3% எங்க போச்சு?

அதுவே கடந்த ஜனவரி மாதம் சென்னையில் 99.9% தூய்மையான 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு 1,83,000 ரூபாய் என்ற சாதனையை எட்டியிருந்தது. ஆனால், இதே தூய்மையான தங்கம் இன்று 10 கிராமுக்கு 1,43,560 ரூபாய் என்ற அளவில் வந்து நிற்கிறது. இதன் மூலம் இந்தியாவில் தங்கத்தின் விலை சுமார் 21% மட்டுமே குறைந்துள்ளது. உலகளாவிய விலை வீழ்ச்சியோடு ஒப்பிடும்போது, இந்திய தங்கம் விலையில் சுமார் 3% வரை வித்தியாசம் இருக்கிறது.

Also Read

சர்வதேச தங்கம் விலை சரிவின் முழு பலனும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காமல் போவதற்கு முக்கியமாக சில காரணங்கள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் தங்கம் அதன் உச்சத்தில் இருந்தபோது, இந்தியா தங்க இறக்குமதி மீது 6% வரியையே விதித்திருந்தது. ஆனால், மே 13 அன்று அரசாங்கம் இறக்குமதி வரியை அதிரடியாக 15% ஆக உயர்த்தியது.

அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் ரூபாய் வீழ்ச்சியை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், வெளிநாட்டிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய தற்போது கூடுதல் வரி செலுத்த வேண்டும்.

Recommended For You

அடுத்ததாக தங்கம் உலக சந்தையில் டாலர் அடிப்படையில்தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் போது, உள்நாட்டில் இறக்குமதி விலை அதிகமாகிறது. இதுவும் தங்கம் விலை சரிவின் பலன் முழுமையாக இந்தியாவுக்கு கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணம். ஜனவரி இறுதியில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 92 ரூபாயாக இருந்தது, பின்னர் மே மாதத்தில் அது 96.96 என ஆனது தற்போது 93.90 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

இதனால் தான் உலக சந்தையில் தங்கம் விலை 24% குறைந்தாலும் இந்தியாவில் 21% மட்டுமே குறைந்துள்ளது, மீதமுள்ள 3% பலன் இறக்குமதி வரி மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றில் மாயமாகிவிடுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+