அட்சய திருதியை பண்டிகை என்றாலே தங்கம் விற்பனை தான் நம் மனதில் பதிந்திருக்கிறது. கடந்த 10 - 15 ஆண்டுகளாக தான் நகை விற்பனை நிறுவனங்கள் பெருமளவில் அட்சய திருதியை குறித்து விளம்பரம் செய்து மக்களை கடைகளை நோக்கி வர வைத்துள்ளன. இந்தியாவில் நாளை மறுதினம் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கலாமா வேண்டாமா, இது ஒரு மூடநம்பிக்கையா என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் மக்கள் மத்தியில் இருக்கலாம். ஆனால் எப்படி இருந்தாலும் எந்த சமயமாக இருந்தாலும் தங்கம் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதனை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தங்கத்தின் வளர்ச்சி நமக்கு உணர்த்தக்கூடிய பாடம். அதற்கு பின்வரும் கணக்கீடே சாட்சி.

2021ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியைக்கு நீங்கள் தங்கம் வாங்கி இருந்தால் தற்போது அதன் மதிப்பு எவ்வளவாக வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் 24 கேரட் தங்கத்தில் 10 கிராமின் விலை கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
| ஆண்டு | 24 கேரட் தங்கம் (10 கிராம்) |
| 2021 | ரூ.46,500 |
| 2022 | ரூ.51,510 |
| 2023 | ரூ.61,300 |
| 2024 | ரூ.73,240 |
| 2025 | ரூ.96,500 |
தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி..!! அட்சய திருதியை எனும் அமோக வாய்ப்பு!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!
2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான இந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு அட்சய திருதியைக்கு நீங்கள் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தை வாங்கி இருந்தால் மொத்தமாக நீங்கள் செய்த முதலீட்டின் அளவு 50 கிராம் தங்கம் மற்றும் நீங்கள் செய்த முதலீட்டு தொகை 3, 29,050 ரூபாய். இன்றைய தினம் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1, 55,000 ரூபாயாக உள்ளது. அப்படி பார்த்தால் 50 கிராமின் விலை 7, 75,000 ரூபாய் ஆகும். அதாவது நீங்கள் செய்த முதலீட்டை விட 4, 45,950 ரூபாய் உங்களுக்கு லாபம். அதாவது 135 சதவீதம் லாபம் தந்து இருக்கிறது.
இந்திய மக்கள் எளிமையாக அணுகும் ஒரு முதலீடாக தங்கம் தான் இருக்கிறது. என்னதான் மியூச்சுவல் ஃபண்டுகள், எஸ்ஐபி முதலீடுகள் எல்லாம் வளர்ச்சி அடைந்தாலும் இந்தியர்களுக்கும் தங்கத்துக்குமான பிணைப்பை நீக்க முடியாது. தற்போது வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து தங்கம் விலை சரிவடைந்துள்ளது. எனவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க கடைகளுக்கு படையெடுப்பார்கள். அட்சய திருதியை நாளில் வாங்கினால் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்தாலும் தங்கம் எப்போது வாங்கினாலும் நீண்ட கால அடிப்படையில் லாபம் தருவதாக தான் இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
