தங்கம் விலை தான் கடந்த ஓராண்டு காலமாக பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. ஏனெனில் கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை சுமார் 70%க்கும் மேல் உயர்ந்துவிட்டது.
சாமானிய மக்கள் நினைத்து கூட பார்க்க முடியாத விலைக்கு தங்கம் வந்துவிட்டது . இன்றைய தேதியில் ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி , சேதாரம் எல்லாம் சேர்த்து நாம் கிட்டத்தட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தாக வேண்டும். தங்கத்தின் இந்த விலை உயர்வு இனி தங்கம் எட்டாக்கனியாக மாறிவிட்டது என்ற உணர்வை மக்களிடம் தந்திருக்கிறது.

தங்கத்தின் இந்த விலை உயர்வு சீனாவை சேர்ந்த ஒரு நபரை வித்தியாசமாக யோசிக்க வைத்திருக்கிறது. பழைய சிம்கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கத்தை தான் பிரித்து எடுத்ததாக சீனாவை சேர்ந்த ஒரு நபர் வெளியிட்ட வீடியோ உலகம் முழுவதுமே ட்ரெண்டானது. தென்கிழக்கு சீனாவின் குவான் மாகாணத்தில் உள்ள சேர்ந்தவர் தான் கியாஹோ என்ற நபர். அவர் குப்பைகளில் இருந்து பழைய சிம் கார்டுகளை சேகரித்து அதிலிருந்து தங்கத்தை பிரித்து எடுத்து சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.
தனக்கு கிடைத்த பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை எப்படி பிரித்து எடுத்தேன் என்பது குறித்து வெளியிட்ட வீடியோ உலகம் முழுவதுமே பரவலாக டிரெண்டானது. ஏராளமானவர்கள் மத்தியில் நாம் ஏன் இதனை முயற்சி செய்யக் கூடாது என்று எண்ணத்தையும் விதைத்தது. ஆனால் இது அத்தனை எளிதான செயல்முறை அல்ல பல்வேறு ஆபத்தானது. அது மட்டும் இல்லாமல் சட்ட விரோதமானது என்பதுதான் பெரும்பாலானவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
இதனை தன்னுடைய வீடியோவிலும் எச்சரிக்கையாக வெளியிட்டு இருக்கிறார் கியாஹோ. முதலில் பழைய சிம் கார்டுகளை எடுத்து ரசாயனங்கள் நிரப்பப்பட்ட டிரம்களில் வைத்து அதிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அதனை பிரித்தெடுத்து வடிகட்டி , சூடாக்கி பின்னர் அதிலிருந்து தங்கத்தை தனியாக துகள்களாகப் பிரித்து அதனை உருக்கி தங்கமாக மாற்ற வேண்டும் என அவர் கூறுகிறார். இவ்வாறு இரண்டு டன் குப்பைகளிலிருந்து பல ஆயிரம் சிம் கார்டுகளை எடுத்து அதிலிருந்து இதுவரை 191 கிராம் தங்கத்தை தான் பிரித்து எடுத்ததாக கூறியிருக்கிறார்.
ஒரு சிம் கார்டில் 0.001 கிராம் அளவுக்கு தான் தங்கம் இருக்கும். அப்படி என்றால் 1 கிராம் தங்கத்தை எடுக்க 1000 சிம்கார்டுகள் தேவை. இவ்வறு சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை எடுக்க பல ரசாயனங்கலை பயன்படுத்த வேண்டும். இந்த செயல்பாட்டின் போது இரசாயனங்கள் நம் உடலில் பட்டால் காயங்கள் ஏற்படலாம், நச்சு கலந்த புகைகளை சுவாசிக்க நேரிடலாம், நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெடிக்கவும் செய்யலாம்.
எனவே சரியான முறையில் நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்பம் தெரிந்த நபர்களால், அனைத்து பாதுகாப்பும் இருக்கும் இடத்தில் தான் இதனை செய்யவே முடியும். நானும் முயற்சி செய்கிறேன் என வீடியோவை பார்த்து முயற்சி செய்தால் இறப்பு வரை கூட செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படியே நீங்கள் பிரித்து எடுத்தாலும் இந்த தங்கத்தை யார் வாங்குவார்கள், இதற்கு யார் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்பது பெரிய கேள்விக்குறி.


Click it and Unblock the Notifications