நகமும் சதையும் போல இந்தியர்களுக்கும் தங்கத்திற்கும் இடையிலான உறவை நம்மால் ஒருபோதும் பிரித்து விட முடியாது. என்னதான் தங்கத்தின் விலை நாள்தோறும் உச்சத்தை எட்டினாலும் இந்தியர்கள் தங்கம் வாங்குவதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள். ஏனெனில் தங்கம் வாங்குவது தங்க நகைகளை வாங்கி பயன்படுத்துவது நம்முடைய கலாச்சாரத்தில் ஒன்றிப்போன ஒரு விஷயமாக இருக்கிறது.
முதலீட்டாளர்களை கைவிடாத தங்கம்: தங்கம் தன்னுடைய முதலீட்டாளர்களை ஒரு போதும் கைவிட்டது கிடையாது. உலகளவில் பாதுகாப்பான முதலீடு என்ற உடன் அனைவரும் முதலில் தங்கத்தின் பக்கம் தான் செல்வார்கள். மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் தங்கம் 200 சதவீதம் லாபம் தந்து இருக்கிறது. அதாவது 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் மதிப்பு 30,000 ரூபாய், அதுவே 2025ஆம் ஆண்டில் 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

6 ஆண்டுகளில் எவ்வளவு லாபம்?: அதாவது 6 ஆண்டுகளில் தங்கம் 200% லாபம் தந்துள்ளது. 2019இல் ஒரு நபர் 1 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கி இருந்தால் தற்போது அதன் மதிப்பு 3 லட்சம் ரூபாயை கடந்திருக்கும். 2025ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஆண்டு என கூறும் வகையில் தொடர்ச்சியாக தங்கம் விலை ஏற்றத்தில் தான் இருக்கிறது. இந்திய பங்குச்சந்தைகளை விட இந்த ஆண்டு தங்கம் தான் அதிக லாபம் தந்துள்ளது.
பங்குச்சந்தையை விட அதிகம்: 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை இந்திய பங்குச்சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடான நிஃப்டி 50 இண்டெக்ஸ் 6.12 சதவீதம் வளர்ந்துள்ளது, சென்செக்ஸ் 5.20 சதவீதம் வளர்ந்துள்ளது. ஆனால் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கத்தின் மதிப்பு 30 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு அதிக லாபம் தந்த ஒரு முதலீடாக தங்கமே முதலிடம் பிடித்துள்ளது.
ஏன் விலை உயர்வு?: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து உலக பொருளாதாரமே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. பல்வேறு நாடுகளுக்கும் இறக்குமதி வரியை அதிகப்படுத்தினார் ,பின்னர் திடீரென அதை நிறுத்தி வைத்தார் தற்போதைக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அதனை தள்ளி வைத்திருக்கிறார். பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தீவிரம் காட்டுகின்றன. இது தவிர உக்ரைன் ரஷ்யா மோதல்கள், ஈரான் இஸ்ரேல் மோதல்கள், அமெரிக்காவின் பொருளாதாரம் மந்த நிலை ஆகிய அனைத்துமே முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி நகரச் செய்தன. எனவே தான் தங்கத்தின் விலை இந்த ஆண்டு வளர்ச்சியிலேயே இருந்தது.
தீபாவளி வரை உயரும்?; யா வெல்த் நிறுவனத்தின் தலைவரான அஜய் குப்தா மிண்ட் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தங்கத்தின் விலையில் ஒரு குறுகிய கால திருத்தத்தை நிச்சயம் காணலாம் என கூறுகிறார். ஆனால் அதன் பிறகு தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவிக்கிறார். எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தீபாவளி பண்டிகை வரை 10 கிராம் தங்கத்தின் விலை 1,00,000 ரூபாய் முதல் 1,03,000 ரூபாய் என்ற விலைக்குள் வர்த்தகமாகும் என அவர் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார் .
ஆகஸ்ட் 1ஆம் தேதி கெடு: எஸ்எம்சி குளோபல் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் இயக்குனரான அஜய் கார்க் தங்கம் விலை பெரிய அளவில் குறைய வேண்டும் என முதலீட்டாளர்கள் காத்திருக்கக் கூடாது ஒரு சிறிய விலை குறைவு ஏற்பட்டாலும் உடனடியாக வாங்கி விட வேண்டும் என கூறுகிறார். இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,05,000 ரூபாய் எட்டும் என்றும் அவர் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார். தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கும் என்பதை ஆகஸ்ட் 1ஆம் தேதி டிரம்ப் எடுக்கும் வரி விதிப்பு நடவடிக்கைகள் தீர்மானிக்கும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?



Click it and Unblock the Notifications