மாத சம்பளக்காரர்கள் முதல் அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் வரையில் இந்த ஆண்டு முக்கிய முதலீடாக இருந்தது தங்கம் தான். தங்கம் மீதான முதலீட்டில் 2025ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையில் சுமார் 53 சதவீதம் அளவிலான லாபத்தை கொடுத்துள்ளது.
இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை நேரடியாக வாங்க முடியாவிட்டாலும், ETF, டிஜிட்டல் கோல்டு என பல வழிகளில் தங்கத்தை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தங்கம் மீதான முதலீட்டில் சீனா நாட்டின் வங்கிகள் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது என சீன அரசின் பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஸ்பாட் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 4000 டாலர் என்ற புதிய பென்ச்மார்க் அளவீட்டை தாண்டி வரலாறு காணாத உயரத்தை எட்டியுள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை 53 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள தங்கம் விலை, உலகளாவிய பொருளாதார அமைப்புகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை உயர்வின் பின்னணியில், உலகில் பல நாடுகள் மத்தியில் குறையாமல் இருக்கும் போர் அச்சம் மற்றும் அமெரிக்க பொருளாதார நிச்சயமற்ற தன்மை முக்கிய காரணங்களாக உள்ளன.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சீனாவின் பல முக்கிய வங்கிகள் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அபாய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன. தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களையும், தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்வோரை விலை ஏற்ற இறக்கங்களில் கவனம் செலுத்தவும், திறமையாக திட்டமிட்டு ரிஸ்க் அளவீடுகளை ஆலோசனை செய்து முதலீடு செய்யவும் அறிவுறுத்தி வருகின்றன.
இண்டஸ்ட்ரியல் மற்றும் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சீனா (ICBC), அக்ரிகல்ச்சரல் பேங்க் ஆஃப் சீனா, சீனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி (CCB) மற்றும் நிங்போ வங்கி ஆகியவை தங்களது உலோகம் சார்ந்த சேவைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.
குறிப்பாக அதிகப்படியான முதலீடுகளை பெறுவதை குறைக்கும் விதமாக குறைந்தபட்ச முதலீட்டு அளவுகோளை உயர்த்துதல், அடைமானம் வைக்கும் அளவுகளை மாற்றுதல் மற்றும் சர்க்யூட் பிரேக்கர் விதிமுறைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்த சீன வங்கிகள் மேற்கொண்டுள்ளது.
இந்த மாற்றங்கள், மறைமுகமாக தங்கம் சேமிப்பு வணிகங்கள் மற்றும் ஷாங்காய் கோல்டு எக்ஸ்சேஞ்ச் உலோக வர்த்தக பெரிதும் பாதிக்கின்றன. இப்படி பல வகையில் மக்களை தங்கத்தில் முதலீடு செய்வதை சீன தடுக்க முயற்சிக்கிறது.
வோர்ல்டு கோல்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த வருடம் தங்கத்தின் விலை உயர்வு 1979க்கு பின்பு பதிவான மிகவும் சிறப்பான அளவீடாகும். 2025 மார்ச் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3000 டாலர்களை எட்டிய நிலையில், ஆகஸ்ட் மாதம் 3300 டாலரை எட்டி தற்போது 20 சதவீதம் உயர்ந்து 4000 டாலரை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்தியா போலவே சீன மக்களுக்கும் தங்கத்தில் முதலீடு செய்வதை தங்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளனர். தங்கம் விலை உயரும் வேளையில் அதிகப்படியான மக்கள் தங்கத்தில் எப்போதும் இல்லாமல் அதிகளவில் தங்கத்தை நேரடியாக வாங்கவும், முதலீடு செய்தும் வருகின்றனர்.
எந்தொரு பொருளாக இருந்தாலும் விலை வேகமாக உயரும் போது, வேகமாக குறையவும் செய்யும் ஆபத்து உள்ளது. இது தங்கத்திற்கும் பொருந்தும், இதனால் பெரிய முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் செய்து முதலீடு செய்வது மூலம் தங்கம் விலை குறையும் போது சரிவை தாங்கிப்பிடிக்க மற்றொரு வழி இருக்கும்.
ஆனால் பெரும்பாலான மக்கள் கையில் இருக்கும் பணத்தை மொத்தமாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இது பெரும் ஆபத்து என்பதை உணர்த்தும் வகையிலேயே சீன வங்கிகள் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளையில் சீன மத்திய வங்கிகள் டாலர் முதலீடுகளை குறைத்துவிட்டு தங்கத்தை தொடர்ந்து வாங்கி வருவதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. மேலும் பல முதலீட்டு வல்லுனர்கள் ஒருவரின் போர்ட்போலியோவில் தங்கம் இல்லாமல் இருப்பது முட்டாள்தனம், அதேபோல் தங்கத்தை 8 முதல் 12 சதவீத்திற்கு மேல் வைத்திருப்பதும் முட்டாள்தனம் என அறிவுரை செய்துள்ளனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?



Click it and Unblock the Notifications