தங்கம் விலை 5 வார உச்சம்.. 6 நாளில் 3000 ரூபாய் உயர்வு.. தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு கவலையாக இருந்தாலும், சிட் பண்ட், காயின், ETF என மக்கள் ஏதாவது ஒரு வகையில் தங்கத்தை தொடர்ந்து வாங்கிக்கொண்டு தான் வருகிறார். அதிலும் குறிப்பாக தங்கம் விலை 1 லட்சம் என்ற விலையை எட்டிய பிறகு தங்கத்திற்கு இணையாக வெள்ளியும் மக்கள் மத்தியில் அதிகளவில் வாங்கப்பட்டு வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் 6 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து இன்று 5 வார உச்சத்தை எட்டியுள்ளது.

புதன்கிழமை காலை வர்த்தகத்தில் உள்நாட்டு சந்தையிலும் சரி, வெளிநாட்டு சந்தையிலும் சரி தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் உயர்ந்து 6வது வர்த்தக நாளாக தனது உயர்வை பதிவு செய்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் எம்சிஎக்ஸ் (MCX) ஆகஸ்ட் 5 தேதி முடியும் 10 கிராம் 24 கேரட் தங்க ஒப்பந்தங்களின் விலை 0.06% உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.1,00,390 என்ற விலையில் வர்த்தகமாகின.

தங்கம் விலை 5 வார உச்சம்.. 6 நாளில் 3000 ரூபாய் உயர்வு.. தொடர்ந்து உயருமா..?

அதே நேரத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில் செப்டம்பர் 5ஆம் தேதி முடியும் 1 கிலோ வெள்ளி ஒப்பந்தங்கள் 0.49% உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரூ.1,16,216 என்ற விலையில் வர்த்தகமாகின. வெள்ளி விலை இதற்கு முன் ஒரு கிலோவுக்கு ரூ.1,16,275 என்ற வராலாற்று உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விலை உயர்வு மூலம் உள்நாட்டு சந்தையில் அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான டிமாண்ட் இருப்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இதேபோல் இன்றைய விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு தான். மேலும் தங்கம் விலை உயர்வு, உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் ஏற்பட்டு உள்ளது.

தங்கம் விலை 5 வார உச்சம்.. 6 நாளில் 3000 ரூபாய் உயர்வு.. தொடர்ந்து உயருமா..?

இன்று தமிழ்நாட்டு ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 950 ரூபாய் உயர்ந்து 93,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1040 ரூபாய் உயர்ந்து 1,02,330 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 832 ரூபாய் உயர்ந்து 81,864 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து 1,29,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து 39,870 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உட்பட அடுத்துடத்து பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், ஜப்பானுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ததாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார், இதன்படி அமெரிக்காவுக்கு வரும் ஜப்பானிய இறக்குமதி பொருட்களுக்கு 15% வரி விதிக்கப்படும்.

இந்த அறிவிப்பு தங்கத்தின் விலை உயர்வுக்கு சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை, அமெரிக்கா அரசு ஜப்பான் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கும் முன் 3435 டாலராக இருந்து ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, அறிவிப்புக்கு பின்பும், ஜப்பான் வர்த்தக சந்தை திறந்த பின்பு 3423 டாலராக குறைந்துள்ளது. ஒரு 6 மணிநேரத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சுமார் 12 டாலருக்கு மேல் சரிந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 5 வார உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா தற்போது இந்தியா மற்றும் சீனா போன்ற முக்கிய பொருளாதார நாடுகள் உடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க வர்த்தக அதிகாரிகளின் குழு, இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியாவிற்கு வரவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை 5 வார உச்சம்.. 6 நாளில் 3000 ரூபாய் உயர்வு.. தொடர்ந்து உயருமா..?

தங்கத்தின் விலை உயர்வு, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக தொடர்ந்து விளங்குகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாப அளவில் ஏற்படும் மாற்றங்கள், தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

உள்நாட்டு சந்தையில், வெள்ளியின் விலை புதிய உச்சத்தை எட்டியது, முதலீட்டாளர்களிடையே வெள்ளி உலோகத்திற்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பதை பிரதிபலிக்கிறது. இந்தியாவில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் இந்த உயர்வு, முதலீட்டாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, திருமணங்கள் மற்றும் பண்டிகைகள் போன்றவற்றிற்கு தங்கத்தை வாங்குவோருக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதேபோல் வெள்ளியின் விலை உயர்வு, தொழில்துறை தேவைகள் மற்றும் முதலீட்டு ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு பின்பு அமெரிக்கா உடன் வர்த்தகம் ஒப்பந்தம் செய்யாத நாடுகள் மீது கடுமையான வரி விதிக்கப்பட உள்ள நிலையில், சர்வதேச வர்த்தகத்தில் பெரும் மாற்றம் இருக்கும். இதனால் தங்கம் முக்கியமான முதலீடாக மாறக்கூடும், இதேபோல் டிரம்ப் அரசு மீண்டும் ரெசிப்ரோக்கல் வரியை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் கொடுத்தால் தங்கம் விலை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பின்பும் இதே நிலையில் இருக்க வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+