வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. இந்திய மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. ஒருபக்கம் புதிதாக தங்கத்தை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வரும் வேளையில், பழைய தங்கம் மற்றும் வெள்ளி சந்தைககு அதிகமாக வர துவங்கியுள்ளது.
இதனால் இந்தியர்களின் பலமாக இருக்கும் தங்க இருப்பு வேகமாக குறைந்து வருகிறதா என்ற கேள்வி எல்லோரிடத்திலும் எழுந்துள்ளது. இதேவேளையில் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை 7 வார உச்சத்தில் உள்ளது, இதோடு ஒரு சவரன் தங்கம் லிலை 1 லட்சத்தை நெருக்கியுள்ளது.

இன்று சென்னை ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்துள்ளது, இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னை விலை தற்போது தமிழ்நாடு முழுவதும் அதிகளவில் பயன்படுத்தும் காரணத்தால் பெரும்பாலான இடத்தில் இதேவிலையில் தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆனால் சில நகரங்களில் உள்ளூர் விலை அடிப்படையில் மாற்றம் இருக்கலாம்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 900 ரூபாய் உயர்ந்து 1,24,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 980 ரூபாய் உயர்ந்து 1,35,930 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 784 ரூபாய் உயர்ந்து 99,680 ரூபாயாக உள்ளது 1 லட்ச அளவீட்டை நெருங்கியுள்ளது. 1லட்சம் அளவீட்டை இன்று மாலை வர்த்தகத்திலோ அல்லது நாளை காலை வர்த்தகத்திலோ எட்டிவிடலாம். மேலும் வெள்ளி விலை கிலோவுக்கு 3000 ரூபாய் உயர்ந்து 2,13,000 ரூபாயாக உள்ளது.
ஸ்பாட் தங்கம் 0.4 சதவீதம் ஏறி அவுன்ஸுக்கு 4,320.65 டாலராகவும், அமெரிக்க தங்க ஃப்யூச்சர்ஸ் 0.6 சதவீதம் உயர்ந்து 4,354 டாலராகவும் வர்த்தகமாகின்றன. இந்த ஆண்டு மட்டும் தங்கம் விலை 64 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் டாலர் இன்டெக்ஸ் இரண்டு மாத உச்சத்திலிருந்து குறைந்து, அமெரிக்காவின் 10 ஆண்டு அரசு பத்திரத்தின் மீதான லாப அளவீடு சற்று சரிந்துள்ளதால் தங்கம் மீதான முதலீட்டுக்கு சாதகமாக சூழ்நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி அடுத்த ஆண்டு வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு தங்கத்தை உயர்த்தியுள்ளது. கூடுதலாக உலகளாவிய அச்சம், முதலீட்டாளர்கள் ரிஸ்க்-ஐ குறைக்கும் திட்டம் ஆகியவை தங்கத்தை பாதுகாப்பு சொத்தாக மாற்றி அதன் தேவையை அதிகரித்துள்ளது. ஃபெட் அதிகாரிகளின் ஹாக்கிஷ் கருத்துகள் டாலரை உயர்த்தலாம் என்றாலும், தற்போது டாலர் பலவீனமாக உள்ளது
வெள்ளி விலை கடந்த வார அதிரடி உயர்வுக்கு பின்பு நிலையாக உள்ளது. இந்த ஆண்டு வெள்ளி 115 சதவீதம் உயர்ந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. உலகளவில் வெள்ளி இருப்பின் அளவு தொடர்ந்து குறைந்து வருவது, தொழில்துறை தேவை அதிகரிப்பு, அமெரிக்காவின் முக்கிய தாதுக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது ஆகியவை வெள்ளிக்கான டிமாண்ட்-ஐ உயர்த்தி விலையையும் உயர்த்தியுள்ளது.
இதை விட முக்கியமாக இந்தியாவில் பென்ஷன் அமைப்பு இனி தங்கம் மற்றும் வெள்ளி ETFகளில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது நிறுவன முதலீட்டை அதிகரிக்கும் என்று ANZ கணித்துள்ளது. இது தங்கம், வெள்ளி தேவையை உயர்த்தி விலையை ஆதரிக்கும்.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications