உலகளாவிய பொருளாதாரம் மற்றும் முதலீட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தின் காரணமாக எப்போதும் இல்லாமல் இந்த வாரம் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதுவும் வெள்ளிக்கிழமை அன்று தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,000 டாலர்கள் என்ற புதிய மைல்கல்லை முதன்முறையாக எட்டியுள்ளது.
வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத உயர்வை எட்டியுள்ளது, குறிப்பாக பொருளாதார நிச்சயமற்ற காலங்களில், பாதுகாப்பான முதலீட்டு சொத்தின் மீது முதலீட்டாளர்களின் கை ஓங்கியிருக்கும், இந்த நிலை தான் தற்போது உருவாகியுள்ளது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கத்தின் விலை 0.4% உயர்ந்து, ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 3,000.87 டாலர்களை எட்டியது. அதே நேரத்தில், அமெரிக்க தங்க பியூச்சர் 0.7% அதிகரித்து, 3,013.60 டாலர்களை எட்டியது.
இதன் தாக்கம் நாளைய வர்த்தகத்தில் தான் எதிரொலிக்கும் என்றாலும், இன்றைய வர்த்தகத்தில் 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 1100 ரூபாய் அதிகரித்து 82,300 ரூபாயாக உள்ளது.
இந்த ஆண்டு தங்கம் அசாதாரணமாக உயர்ந்துள்ளது, 2025 ஆம் ஆண்டு பிறந்து 3 மாதத்தில் இதுவரை 13 சாதனை உச்சத்தை எட்டியுள்ளது, மேலும் இது இரண்டாவது வாரமாக தொடர்ச்சியாக உயர்ந்து தங்க முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்தாலும் புதிதாக தங்கத்தை வாங்குவோருக்கு பெரும் நெருக்கடியாகவே உள்ளது.
ஒருப்பக்கம் புவிசார் அரசியல் பதட்டங்களால் தங்கம் கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக உயர்ந்து வந்த வேளையில், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் வரி உயர்வு, அமெரிக்க பங்குச்சந்தை சரிவு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் இந்த வாரம் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் துவங்கிய வர்த்தக போர் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் விஸ்வரூபம் எடுக்க உள்ளது, ஏற்கனவே ஐரோப்பிய ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது வரி விதிக்கப்பட்டு வர்த்தக போருக்கான தீ மூட்டப்பட்டு உள்ளது. ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200% வரி விதிப்பதாக சமீபத்தில் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்த்ததை விட குறையும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இது பெடரல் ரிசர்வ் புதிய வட்டி விகிதக் குறைப்புகளை அறிவிக்காது என கணிக்கப்பட்டு உள்ளது. புதன்கிழமை நடைபெற உள்ள பெடரல் ரிசர்வின் நாணய கொள்கை கூட்டத்தில் தற்போதைய பெஞ்ச்மார்க் இரவு நேர வட்டி விகிதத்தை தொடர முடிவு எடுத்தால் தங்கம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெடரல் ரிசர்வ்-ன் முடிவு தான் ஸ்பாட் சந்தையில் தங்கத்தின் விலை 3,000 டாலர் மதிப்பை விட அதிகமாக இருக்குமா அல்லது குறையுமா என்பது தெரியவரும். இதேபோல் ஜூன் மாத கூட்டத்தில் தான் அடுத்த வட்டி குறைப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தை போல் ஸ்பாட் வெள்ளி 0.4% அதிகரித்து, அவுன்ஸ் ஒன்றுக்கு 33.94 டாலர்களை எட்டியது. இருப்பினும், பிளாட்டினம் 0.5% குறைந்து, 989.04 டாலர்களாகக் குறைந்தது, அதே நேரத்தில் பல்லேடியம் 0.3% அதிகரித்து, 960.71 டாலர்களை எட்டியது.
More From GoodReturns

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications