தங்கம் மீதான முதலீடு தான் அடுத்த 2 மாதங்களுக்கு முக்கியமான பேசு பொருளாக இருக்கப்போகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இன்று தனது நாணய கொள்கை கூட்டத்தை துவங்கும் காரணத்தால் முதலீட்டு சந்தையில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
சர்வதேச சந்தையில் தங்க விலை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) ஒரு அவுன்ஸுக்கு சுமார் 3,684 டாலர்கள் அளவீட்டை தொட்டு 3687.72 என்ற வரலாற்று உச்ச அளவை நெருங்கியுள்ளது. அமெரிக்க டாலரின் பலவீனம், அமெரிக்காவில் அதிகரித்துள்ள பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவை இன்று தொடங்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (பெடரல் ரிசர்வ்) அமைப்பின் இரண்டு நாள் கொள்கை கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதம் 0.50 சதவீதம் வரையில் குறைக்கப்படலாம் என பேசப்படுகிறது.

இதன் எதிரொலியாக பெட் கூட்டம் துவங்குவதற்கு முன்பே தங்கம் விலை சர்வதேச சந்தையில் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்க டாலரின் பலவீனம் காரணமாக தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 3,680 டாலர்கள் என்ற அளவை நெருங்கியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய தகவல்:
சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த ஒரு வருடத்தில் 43.18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் யாரும் கண்டுக்கொள்ளாத பிளாட்டினம் விலையும் 42.76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தற்போது மிடில் கிளாஸ் மக்களின் முக்கிய முதலீடாக மாறியிருக்கும் வெள்ளி 39.05 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என டிரேடிங் எக்னாமிக்ஸ் தெரிவித்துள்ளது.
பெடரல் ரிசர்வ் - தங்கம் விலை:
வியாழன்கிழமை பெடரல் ரிசர்வ் அமைப்பின் முடிவு தங்கத்தின் விலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. சந்தை கணிப்புகள் படி 0.25 சதவீதம் வட்டி குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் டிரம்ப் பெடரல் ரிசர்வ்-க்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் காரணத்தால் 0.50 சதவீதம் குறைக்கவும் வாய்ப்புகள் உள்ளது என சந்தையில் கருத்து நிலவுகிறது.
ஏனெனில் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு பெடரல் ரிசர்வ் முதல் முறையாக வட்டியை குறைக்க உள்ளது. மேலும் இந்த வட்டி குறைப்பு அடுத்த ஆண்டு வரை நீடிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
பிற மத்திய வங்கிகள்
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி முடிவுகளுடன், அடுத்து இங்கிலாந்து மத்திய வங்கி (BoE), ஜப்பான் மத்திய வங்கி (BoJ) மற்றும் கனடா மத்திய வங்கி (BoC) ஆகியவையும் தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிட உள்ளது. அமெரிக்காவின் கொள்கை முறையை மற்ற நாடுகளும் பாலோ செய்தால் தங்கம் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
டிரம்ப்-ன் வரி விதிப்புக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளையும் வரி விதிக்க அமெரிக்க தூண்டி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த சர்வதேச வர்த்தகமும் மந்தமடைந்துள்ள வேளையில், அமெரிக்கா - பிரிட்டன் - ஜப்பான் - கனடா என 4 பெரிய பொருளாதார நாடுகள் தங்களது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்தால் தங்கம் தான் முக்கிய முதலீட்டு கருவியாக இருக்கும்.
தங்கத்தில் முதலீடு:
தங்கம் தற்போது உச்ச விலை அருகில் இருந்தாலும், பெடரல் ரிசர்வ் மற்றும் பிற முக்கிய நாடுகளின் மத்திய வங்கிகளின் முடிவுகள் தங்கம் மேலும் உயரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே, தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் தங்கம் வாங்கலாம், இதேபோல் விலை குறையும் போது வங்குவது உத்தமம். ஆனால் முதலீடு செய்யும் போது உங்களுடைய நிதி சூழலை கருத்தில் கொண்டு சிறிய அளவில் தொடங்க வேண்டும்.
மேலும் தங்கத்தில் மொத்த பணத்தையும் முதலீடு செய்வது தவறு, உங்களுடைய முதலீட்டை பல இடங்களில், பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!



Click it and Unblock the Notifications