சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலையை ஒரு சதவீதம் உயர்ந்து இரண்டு வார உயர்வை எட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தங்கத்தின் மீதான கவர்ச்சி தங்க விலை உயர்வதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் மற்ற முதலீடுகளை விட தங்கத்தில் முதலீடு செய்வதில் பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு, பணவீக்கம், பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணமாக பல்வேறு தொழில்கள் நலிவடைந்தாலும், தங்கத்தின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பெடரல் வங்கி
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க பெடரல் வங்கி இன்னும் 75 புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1.3% அதிகம்
தற்போதைய நிலையில் தங்கம் சர்வதேச சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு $1,674.09 என விற்பனையாகியுள்ளது. இது நேற்றைய விலையை விட 1.3% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் 13ஆம் தேதிக்கு பிறகு தங்கம் அதன் அதிகபட்ச விலையை தொட்டுள்ளது.
குறைய வாய்ப்பு
பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்த போதிலும் பலவீனமான டாலர் மதிப்பு மற்றும் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் ஒரு அவுன்ஸ் 1,600 டாலர் என தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பான முதலீடு
பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும் என்பதே தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சரியான சேமிப்பு
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட சேமிப்பு வகையும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம். ஆனால் தங்கம் என்பது நீண்ட கால அடிப்படையில் உயர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் உயர்ந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வதே நம்பிக்கையானது என்றும் பொதுமக்கள் கருத்தாக உள்ளது.
ஆன்லைனில் தங்கம்
தங்கத்தை நகைகளாக மட்டுமின்றி ஆன்லைன் மூலமும் தங்கத்தை சேமிக்கும் வழி தற்போது உள்ளது என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது ஆன்லைனில் தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பதே பலர் விரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 காரட் தங்கம்
அதுமட்டுமின்றி தங்கத்தை நகைகளாக வாங்கினால் செய்கூலி மற்றும் சேதாரம் என ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் ஆன்லைனில் 24 காரட் சுத்தமான தங்கம் வாங்கினால் எந்தவித கூடுதல் செலவுமின்றி நம்மிடம் இருக்கும் மொத்த தொகைக்கும் தங்கமாக வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபரண தங்கம்
மேலும் ஆன்லைனில் வாங்கி சேமித்து வைத்த தங்கத்தை ஆபரணமாக மாற்ற விரும்பினால் தங்கக்கட்டியாக வாங்கி ஆபரணமாக மாற்றிக் கொள்ளலாம் என்ற வழியும் இருப்பதால் தங்கத்தை ஆன்லைனில் வாங்குவது தான் சிறந்தது என்பதே முதலீட்டாளர்களின் எண்ணமாக உள்ளது.
நிதி ஆலோசகர்கள்
எனவே திருமணம் போன்ற சுபகாரியங்களை தவிர சேமிப்பு வகைக்காக தங்கத்தை வாங்குபவர்கள் ஆன்லைனில் தங்கத்தை வாங்குவதே சிறந்தது என்பது நிதி ஆலோசகர்களின் அறிவுரையாக உள்ளது.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications