உலகமே தங்கம் விலையை தான் தற்போது உற்று நோக்கி வருகிறது, ஒருப்பக்கம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவுகள் தங்கம் விலையை உயர்வுக்கு காரணமாக இருந்தாலும், டிரம்ப் அமெரிக்க டாலர் குறித்து தெரிவித்த கருத்து தங்கம் முக்கிய சொத்தாக மாறியுள்ளது.
தங்க விலை புதன்கிழமை அமெரிக்க சந்தையின் காலை வர்த்தகத்தில் வரலாற்று உச்சத்தை எட்டியது. ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் அதாவது சுமார் 31 கிராம் அளவிலான 24 கேரட் தங்கம் விலை 5,300 டாலர் அளவை முதல் முறையாக கடந்தது.

இதேவேளையில் அமெரிக்க டாலர் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்ததுள்ளது, மேலும் உலகளவில் தொடரும் புவிசார் அச்சங்களும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தன. ஃபெடரல் ரிசர்வ் கொள்கை முடிவுகள் அறிவிக்கும் முன்பே இந்த உயர்வு ஏற்பட்டது கூடுதல் அதிர்ச்சியாகும்.
புதன்கிழமை அமெரிக்க சந்தையின் காலை வர்த்தகத்தில் கோல்டு ஃபியூச்சர்ஸ் 3.6 சதவீதம் உயர்ந்து 5,306.70 டாலராக வர்த்தகமானது. இதேபோல் ஸ்பாட் விலை 4.2 சதவீதம் உயர்ந்து 5,277.25 டாலராக உள்ளது. ஸ்பாட் சந்தை வர்த்தக தொடக்கத்தில் தங்கம் விலை 5,316.12 என்ற புதிய உச்சத்தை எட்டியது. தங்கம் விலை உயர முக்கிய காரணமாக இருந்த டாலர் குறியீடு (DXY) 0.2 சதவீதம் சரிந்து 96.08ஆக, நான்கு மாத குறைந்த அளவை தொட்டது.
டாலர் மதிப்பு சரிய முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துகள் தான், செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் டாலர் மதிப்பு கணிக்கப்பட்டதை விடவும் டாலர் மதிப்பு பெரிய அளவில் சரிந்துள்ளதா என கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த டிரம்ப் டலர் மதிப்பு "மிகவும் நன்றாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
டிரம்ப்-ன் பதில் மூலம் அமெரிக்க அரசு பலவீனமான டாலருக்கு ஆதரவாக உள்ளது என்ற பொருளை தந்தது. OANDA மூத்த சந்தை ஆய்வாளர் கெல்வின் வோங் கூறுகையில், தங்க விலை உயர்வுக்கு டாலரின் சரிவு முக்கிய காரணம் என்றார். டிரம்பின் கருத்து டாலர் மதிப்பு தொடர்ந்து பலவீனப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இதேபோல் டாலர் மதிப்பு குறைவது மூலம் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் டிரம்ப் இதை கணக்கிட்ட ஆபத்தாக எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஃபெடரல் ரிசர்வ் இன்று நடைபெறும் கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2026இல் இரண்டு முறை வட்டி குறைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மையை அதிகரித்துள்ளது.
டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவு மூலம் உலகெங்கும் தங்கத்தை முதலீட்டு சொத்தாக மாற்றி வருகிறது. சாமானிய மக்களுக்கு தங்கம் வாங்குவது இப்போது அதிக செலவாக இருந்தாலும், நீண்டகால பாதுகாப்பு மற்றும் மதிப்பு உயர்வுக்கான வாய்ப்பாக உள்ளது.
இதனால் நாளை இந்திய சந்தையில் தங்கம் விலை தடாலடியாக உயரும், மேலும் இன்று இரவு 2.30 மணிக்கு அமெரிக்க பெடரல் ரிசர்ல் தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிட உள்ளது. இதில் வட்டி குறைக்கப்பட்டால் தங்கம் விலை நாளை தடாலடியாக உயரும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications