தங்கம் இறக்குமதி வீழ்ச்சியா.. அதுவும் 7%.. இன்னும் குறைஞ்சா நல்லா தான் இருக்கும்..!

டெல்லி: நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க மத்திய அரசு இறக்குமதி வரி என்னும் ஆயுதத்தை கையில் எடுத்த நிலையில், நாட்டில் தங்கம் இறக்குமதி மத்திய அரசு எதிர்பார்த்ததை போலவே வீழ்ச்சி கண்டுள்ளது.

அதிலும் கொஞ்ச நஞ்சம் அல்ல, 6.77 சதவிகிதம் வீழ்ச்சி. ஆனாலும் இந்தியாவில தங்கத்தினை விரும்பாத பெண்களை பார்ப்பது மிக அரிது.

அதிலும் ஒரு புறம் தங்கம் இறக்குமதியால் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வந்தாலும், மறுபுறம் தங்கம் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இறக்குமதி வீழ்ச்சி

இறக்குமதி வீழ்ச்சி

இந்த நிலையில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் - டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் தங்கம் இறக்குமதி 6.77 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 23 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 - 19 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இந்த மஞ்சள் உலோகத்தின் இறக்குமதி மதிப்பு 24.73 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பற்றாக்குறையும் வீழ்ச்சி

பற்றாக்குறையும் வீழ்ச்சி

எனினும் தங்கம் இறக்குமதி குறைந்திருப்பதாக கூறப்பட்டாலும், இதன் விளைவாக மறுபுறம் தங்கம் இறக்குமதி வீழ்ச்சி வர்த்தக பற்றாக்குறையை 118 பில்லியன் டாலர்களாக குறைக்க உதவியது. இதே ஒரு வருடத்திற்கு முன்பு 148.23 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசின் எதிர்பார்ப்பு இதில் கைகொடுத்ததாகவே கூறலாம்.

தங்கம் இறக்குமதி சரிவு

தங்கம் இறக்குமதி சரிவு

தங்கம் இறக்குமதியானது கடந்த ஜூலை மாதத்தில் இருந்தது எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இருப்பினும் இது கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் சுமார் 4 சதவிகிதம் மட்டுமே சுருங்கியது.

ஏற்றுமதி வீழ்ச்சி

ஏற்றுமதி வீழ்ச்சி

இந்தியா போன்ற மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இது முக்கியமாக நகைத் துறையின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதே இந்த ஆண்டில் 800- 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. தங்கம் இறக்குமதி குறைவினால் நடப்பு ஆண்டில் தங்க ஆபரண ஏற்றுமதியும் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரி குறைக்கப்படுமா?

வரி குறைக்கப்படுமா?

இந்த நிலையில் கடந்த ஆண்டில் வர்த்தக பற்றாக்குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு 10 சதவிகிதமாக இருந்த தங்கம் இறக்குமதி வரியை 10%ல் இருந்து 12.5% ஆக உயர்த்தியது. ஆனால் இதனால் தங்க ஆபரண ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், வரவிருக்கும் பட்ஜெட்டில் தங்க நகை ஏற்றுமதியை அதிகரிக்க, தங்க இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தான் எதிர்பார்ப்பு?

இது தான் எதிர்பார்ப்பு?

எனினும் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரி எக்ஸ்போர்ட் புரோமேஷன் கவுன்சில் தங்கம் இறக்குமதி வரியை 4% ஆக குறைக்க, நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறது. சொல்லப்போனால் நடப்பு நிதியாண்டில் ஆபரண ஏற்றுமதி 6.4% வீழ்ச்சி கண்டு 27.9 பில்லியன் டாலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் வரவிருக்கும் மாதங்களில் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு பட்ஜெட்டில் வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+