நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும், நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒரு புறம் விஸ்வரூபம் எடுத்து ஆடியது.
இதனை குறைக்க மத்திய அரசு தங்கம் இறக்குமதி வரியை கையில் எடுத்தது. மத்திய அரசின் இந்த துரித நடவடிக்கை மிக நன்றாகவே கைகொடுத்தது என்று கூறலாம்.
ஒரு புறம் தங்கம் இறக்குமதி வரி அதிகரிப்பால், அரசு எதிர்பார்த்ததை போலவே தங்கம் இறக்குமதியும் குறைந்தது. இதன் எதிரொலியாக நடப்பு கணக்கு பற்றாக் குறையும் கணிசமான அளவு குறைந்தது.
இறக்குமதி வீழ்ச்சி
ஆனால் மறுபுறம் இதனால் தங்க ஆபரண ஏற்றுமதியும் வீழ்ச்சி கண்டது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜனவரி காலகட்டத்தில் சுமார் 9% சரிந்து, 24.64 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 - 19ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் மஞ்சள் உலோகத்தின் இறக்குமதி 27 பில்லியன் டாலராக இருந்தது.
வர்த்தக பற்றாக்குறை குறைந்தது
தங்க இறக்குமதியின் சரிவு நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜனவரி காலகட்டத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை 133.27 பில்லியன் டாலர்களாகக் குறைக்க உதவியுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 163.27 பில்லியன் டாலர்களாக இருந்தது.
எதிர்மறையான வளர்ச்சி
கடந்த ஆண்டு ஜீலை முதல் தங்கம் இறக்குமதி எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இருப்பினும் இது கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சாதமான வளர்ச்சியை பதிவு செய்தது. டிசம்பரில் சுமார் 4%, இதே ஜனவரியில் 31.5% வீழ்ச்சி கண்டுள்ளது.
இறக்குமதி வரி அதிகரிப்பு
தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா, பல்வேறு நாடுகளுக்கு ஆபரணமாக திரும்ப ஏற்றுமதி செய்து வருகிறது. ஆண்டு தோறும் சராசரியாக இந்தியாவில் 800 -900 டன் தங்கத்தினை இறக்குமதி செய்து வருகிறது. ஆக இதனால் தங்கத்தின் மீதான இறக்குமதி எதிர்மறையான தாக்கத்தினை குறைக்க, அரசாங்கம் உலோகத்தின் இறக்குமதி வரியை 10%ல் இருந்து 12.5% ஆக உயர்த்தியது.
ஏற்றுமதி வீழ்ச்சி
ரத்தின மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி வரியை 4% குறைக்க கோரியிருந்தனர். இந்த நிதியாண்டில் ஏப்ரல் - ஜனவரி மாதங்களில் ரத்தின மற்றும் நகை ஏற்றுமதி 1.45% குறைந்து, 25.11 பில்லியன் டாலராக இருந்தது. நாட்டின் தங்க இறக்குமதி மதிப்பு அடிப்படையில் 3% குறைந்து 2018- 19ல் 32.8 பில்லியன் டாலராக இருந்தது.
வைர இறக்குமதியும் வீழ்ச்சி
ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9% அல்லது ஜூலை - செப்டம்பர் மாதங்களில் சிஏடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9% அல்லது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 19 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. ஜெம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் கவுன்சிலின் தரவுகளின் படி, ஏப்ரல் -ஜனவரி 2019 - 20 ஆண்டுகளில் தோராயமான வைரங்களின் இறக்குமதி 15.54% குறைந்து சுமார் 11 பில்லியன் டாலராக இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications