பொதுவாக ஒரு பொருளுக்கு சந்தையில் பற்றாக்குறை இருந்தாலே விலை அதிகரிக்கும் என்று கூறுவார்கள்.
இந்த நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் தங்கம் இறக்குமதியானது 94% வீழ்ச்சி கண்டு, 688 மில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது. இதன் மதிப்பு 5,160 கோடி ரூபாயாகும்.
இது குறித்து வெளியான அறிக்கையின் படி, கடந்த ஆண்டு இதே காலத்தில் தங்கம் இறக்குமதியானது 11.5 பில்லியன் டாலர்களாக அதாவது, 86,250 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வெள்ளி இறக்குமதி
தங்கம் இறக்குமதி தான் இப்படி எனில், வெள்ளி விலை இறக்குமதி 45% சரிந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. வெள்ளி இறக்குமதி 45% குறைந்து, 575 மில்லியன் டாலர் குறைந்துள்ளது. இதன் மதிப்பு 4,300 கோடி ரூபாயாகும்.
வர்த்தக பற்றாக்குறை
தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வீழ்ச்சியானது வர்த்தக பற்றாக்குறைக்கு கைகொடுத்துள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான பற்றாக்குறையானது முதல் காலாண்டில் 9.12 பில்லியன் டாலர் ஆக உள்ளது என்று தரவுகள் கூறுகின்றன. இது கடந்த ஆண்டில் 45.96 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி வீழ்ச்சி
கடந்த ஆண்டு இறுதி முதலே தங்கம் இறக்குமதியானது எதிர்மறையாக பதிவு செய்து வருகிறது. மார்ச், ஏப்ரல் மே மாதம் மற்றும் ஜூன் மாதங்களில் முறையே வீழ்ச்சி 62.6%. 99.93% மற்றும் 94.4% 77.4% வீழ்ச்சி என பதிவு செய்துள்ளது. உலகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
நகை ஏற்றுமதி வீழ்ச்சி
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தினை பெரும்பாலும் மீண்டும் நகைகளாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா ஆண்டு தோறும் 800 - 900 டன் தங்கத்தினை இறக்குமதி செய்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரி ஏற்றுமதி 72% குறைந்து 2.7 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.
இறக்குமதி குறையலாம்
கடந்த ஆண்டு 2019-2020 தங்கம் இறக்குமதியானது 11.5 பில்லியன் டாலர் மதிப்பில் (86,250 கோடி ரூபாயாக) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் இனியும் தங்கம் இறக்குமதி குறையலாம் என்றே நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!



Click it and Unblock the Notifications