தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியானது அக்டோபர் மாதத்தில் சரிவினைக் கண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் - அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதியானது 17.38% குறைந்து, 24 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
இது விலை அதிகரிப்பின் மத்தியில் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தங்கத்தின் விலையானது 29 பில்லியன் டாலராக உள்ளது.

வெள்ளி இறக்குமதி
இதே வெள்ளி இறக்குமதியானது, 34.80% குறைந்து, 585 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. எனினும் ஏப்ரல் - அக்டோபர் மாதத்தில் 4.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1.52 பில்லியன் டாலராக இருந்தது.
ஏப்ரல் - அக்டோபர் 2022க்கான வர்த்தக பற்றாக்குறை 173.46 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 94.16 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி
இருப்பினும் ஏப்ரல் - அக்டோபரில் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரிஸ் ஏற்றுமதியானது ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதியானது 1.81% அதிகரித்து, 24 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

தேவை எப்போது அதிகரிக்கும்?
தற்போது உலகளவில் பணவீக்கம் காரணமாக தேவை சரிவினைக் கண்டாலும், 2023ல் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் சர்வதேச சந்தையில் விலை உயர்ந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி விலையை மத்திய அரசு உயர்த்தியது. இது மேற்கொண்டு விலையை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

உலக தங்க கவுன்சில் அறிக்கை
சமீபத்தில் உலக தங்க கவுன்சில் தங்கத்தின் தேவையானது அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் குறையலாம் என கணித்தது. இது பணவீக்கத்தின் மத்தியில் தேவையானது சரியலாம் என எதிர்பார்க்கின்றது. தேவையானது குறைந்துள்ள நிலையில் இறக்குமதியும் சரிவினை கண்டுள்ளது.

ரூபாய்க்கு சாதகமாக அமையலாம்
குறிப்பாக கிராமப்புற பகுதியில் பணவீக்கம் காணப்படுகிறது. இது வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வழிவகுக்கலாம். இது ரூபாயின் மதிப்புக்கு ஆதரவாக அமையலாம்.
கடந்த ஆண்டுகளில் நகை விற்பனை அதிகரித்த நிலையில், இந்தியாவின் தங்கத்திற்கான தேவை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட, 14% அதிகரித்து, 191.7 டன்னாக உயர்ந்துள்ளது.

தங்க கவுன்சிலின் கணிப்பு
டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை ஒரு வருடத்திற்கு முன்பு 343.9 டன்னிலிருந்து சுமார், 250 டன்னாக குறையும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தங்க நுகர்வானது 750 டன்களாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய 797.3 டன்களாக இருந்தது. இதனை காட்டிலும் நடப்பு ஆண்டில் 6% குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.