இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் அளவு மோசமான நிலையை அடைந்து வரும் நிலையிலும் தங்கத்திற்கான டிமாண்ட் குறையாமல் உள்ளது என்றால் மிகையில்லை.
2020ல் இருந்து இந்தியாவில் பல கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தை இழந்து தவித்து வருவது மட்டும் அல்லாமல், பல கோடி பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டனர். இந்த மோசமான நிலையிலும் இந்தியாவில் தங்கம் இறக்குமதி அளவு 11 மடங்கு அதிகரித்துள்ளது சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் தங்கம்
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகம் பாதிக்கும் இரு முக்கியக் காரணி கச்சா எண்ணெய் மற்றும் தங்கம். இவை இரண்டும் இந்தியாவில் இல்லாத காரணத்தால் 90 சதவீத தேவையை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ரூபாய் மதிப்பு
இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிவுக்கும், நிலையற்ற தன்மைக்கும் இது மிகப்பெரிய காரணமாக உள்ளது என்றால் மிகையில்லை. இதேபோல் இந்திய அரசு அதிகளவிலான டாலர் இருப்பைச் செலவு செய்ய வேண்டிய முக்கியமான வர்த்தகப் பொருளாக இது உள்ளது.
7.9 பில்லியன் டாலர் தங்கம்
இந்நிலையில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மட்டும் சுமார் 7.9 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளனர். அதாவது வெறும் 3 மாத காலகட்டத்தில் 58,572.99 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
2020 நிலை
2020ஆம் ஆண்டின் இதே ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு வெறும் 688 மில்லியன் டாலர் அதாவது 5,208.41 கோடி ரூபாய் மட்டுமே. இது கிட்டதட்ட 11 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் பற்றாக்குறை
தங்கம் இறக்குமதி அதிகமான காரணத்தால் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அதாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் மத்தியிலான வித்தியாசம் 31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications