தங்கம் என்பது என்னதான் நெருக்கடியான காலகட்டமாக இருந்தாலும், தங்கத்தின் தேவையானது அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் கடந்த 9 மாதங்களில் தங்கத்தின் தேவையானது இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இது குறித்த வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின் படி, இந்தியாவின் தங்க இறக்குமதி ஏப்ரல் - டிசம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் 38 பில்லியன் டாலராக இருமடங்காக அதிகரித்துள்ளது.
இது நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. எனினும் தற்போது ஓமிக்ரான் அதிகரித்து வரும் நிலையில், இனியும் இறக்குமதியானது அதிகரிக்குமா? என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.
தேவை அதிகரிப்பு
இது கொரோனா நெருக்கடி காலகட்டத்திலும் தங்கத்தின் தேவையானது வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், இந்தளவுக்கு இறக்குமதியானது அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் - டிசம்பர் 2020 காலகட்டத்தில் தங்கம் இறக்குமதியானது 16.78 பில்லியன் டாலராக இருந்துள்ளது.
டிசம்பர் 2021
கடந்த டிசம்பர் மாதத்தில் கூட இறக்குமதியானது 2021ல் 4.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4.5 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது விழாக்கால பருவம் மற்றும் திருமண விழாக்கள் என பலரும் தங்கத்தின் இறக்குமதியினை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
தங்கம் இறக்குமதியானது கடந்த 9 மாதங்களில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது, 142.44 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் - டிசம்பர் 2020ல் 61.38 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி இறக்குமதியும் அதிகரிப்பு
இதே கால கட்டத்தில் வெள்ளி இறக்குமதியானது 2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 762 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு அடுத்ததாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. இறக்குமதி செய்யப்படுவதில் அதிகளவில் நகைக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஏற்றுமதி
ஜெம் & ஜூவல்லரி ஏற்றுமதியானது ஒன்பது மாத காலகட்டத்தில் 71% அதிகரித்து, 29 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 9.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி-யில் 1.3% வந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications