சென்னை: தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்பதே இந்தியாவில் கூறப்படும் பெரும்பாலானோரின் கருத்து. அது உண்மை என்பதை காட்டும் விதமாக கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி தங்கத்தின் விலையில் உள்ளது. மண்ணில் போடுவதும் பொன்னில் போடுவதும் ஒன்றுதான் என்று பலர் கூறக் கேட்டிருப்போம். அதை உண்மையில் நிரூபித்துள்ளது தற்போதைய தங்க விலை. சரி 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் 1 லட்ச ரூபாய்க்கு தங்க நகைகள் வாங்கி இருந்தால் தற்போது அதன் மதிப்பு என்னவாக இருந்திருக்கும் என்று பார்ப்போம்.
கால காலமாக தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள் ஆகியவை மக்களின் விரும்பப்படும் முதலீட்டு விருப்பங்களில் முதன்மையாக உள்ளன. இவை நன்மைகளை மட்டும் தான் வழங்குமா என்று நீங்கள் கேட்டால்.. அனைத்து முதலீட்டு திட்டங்களிலும் நன்மை மற்றும் தீமை கலந்து தான் இருக்கிறது. இருந்தாலும் அவற்றின் செயல் திறனை வைத்து மக்கள் இதுபோன்ற திட்டங்களை, அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள குடும்பங்கள் தங்கத்தின் முதலீட்டை அதிகம் விரும்புகின்றனர்.

சரி 20 வருடங்களுக்கு முன்பு நீங்கள் ரூ. 1 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகை வாங்கி இருந்தால் அவற்றின் இன்றைய மதிப்பு என்ன என்பதை பார்ப்போம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 585 ரூபாயாக இருந்தது. அப்படியானால் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 5850. ஆனால் தற்போது தங்கத்தின் விலையை யோசித்துப் பாருங்கள். அதே 10 கிராம் தங்கத்தின் தற்போதய விலை ரூ. 74,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மே 21ஆம் தேதி நிலவரப்படி, 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை 74, 220 ரூபாயாக இருந்தது. அப்படியானால் 1 கிராம் தங்கத்தின் அப்போதைய விலை ரூ. 585 ரூபாயையும், தற்போதய விலையான ரூ. 7,422 ரூபாயையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய வித்தியாசம்.
அதாவது 20 வருடத்திற்கும் 13.5% தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்த விகிதத்தை கணக்கில் கொண்டால் 2024ஆம் ஆண்டில், அதாவது 20 வருடத்திற்கு முன்பு, நீங்கள் 1 லட்ச ரூபாய்க்கு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், தற்போது அது ரூ. 12.5 லட்சமாக மாறி இருக்கும்.
கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் சில்லறை முதலீட்டாளர்களுக்கான, சிறந்த முதலீட்டு கருவியாக இருந்தது என்கிறார் AURM நிறுவனத்தின் இணை நிறுவனர் சூரஜ் எச்எஸ்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?



Click it and Unblock the Notifications