பெய்ஜிங்: பொருளாதார நிச்சயம்மற்ற நிலைமை இருந்தாலும் தங்கம் ஒரு சிறந்த முதலீடாகப் பார்க்கப்படுகிறது. கடந்த திங்களன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 7200 க்கு மேல் விற்கப்பட்டது. சர்வதேச சந்தைகளிலும் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு ரூ. 2315 ஆக டிரேடிங் செய்யப்பட்டது. தற்போது சீனாவில் உள்ள மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கம் விலை உயருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2024ஆம் ஆண்டில் மட்டும், தங்கத்தின் விலை சுமார் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 2023ஆம் ஆண்டில் 10 சதவீதம் அதிகரித்தது. இந்த அளவு விலை உயர்வுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

இளம் முதலீட்டாளர்களின் ஆர்வம்: சீனாவில் உள்ள மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். சீனாவில் 2024 ஆம் ஆண்டில் Q 1 காலாண்டில் மட்டும்,தங்க நகை வாங்கியவர்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டின் Q 1 காலாண்டுடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் உயர்ந்துள்ளது என்று சீனா கோல்ட் அசோசியேசன் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதேபோல் 2023 ஆம் ஆண்டிலும் தங்கம் வாங்கியவர்களின் எண்ணிக்கை சுமார் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களால், சீனாவில் தங்க நகைகளுக்கான தேவை 10% உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கோல்ட் பார்கள் மற்றும் தங்க நாணயங்கள் வாங்கியவர்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், சீனா தற்போது மிகப்பெரிய தங்க நகை உற்பத்தியாளராக உள்ளது. அதுமட்டுமின்றி சீனாவில், தங்க நகை வாங்கும் மக்களின் அடிப்படையில், முதலிடத்தில் உள்ளது.
தி எக்கனாமிஸ்ட்டின் கருத்துப்படி, சீனாவில் தங்கம் வாங்குபவர்களில் நடுத்தர வயதுப் பெண்களே அதிகம். ஆனால் தற்போது பல தங்க நகை வாடிக்கையாளர்கள் 20 வயதிற்குள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. பார் கோல்ட் வாங்குவதற்கு அதிக முதலீடு இல்லாதவர்களும், ஒரு கிராம் தங்க நகைகளாவது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தாலும், தங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு கிராமாவது வாங்கி சேமித்து விட முடியும் என்று பலர் நம்புவதால், தங்கத்தில் முதலீடு செய்வதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பல வாடிக்கையாளர்கள் 20 வயதிற்குள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இது பங்குகள் மற்றும் ரியல் எஸ்டேட் மீது, அவர்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மத்திய வங்கியின் செயல்பாடுகள்: சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா (PBC) சமீபகாலமாக தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் உலகின் மற்ற வங்கிகளோடு ஒப்பிடுகையில் அதிக அளவில் தங்கத்தை வாங்கியுள்ளது. உலகில் உள்ள அனைத்து மத்திய வங்கிகளால் வாங்கப்பட்ட 1,037 டன் தங்கத்தில், PBC மட்டும் கால் பகுதி தங்கத்தை வாங்கியுள்ளது.
அதாவது சுமார் 225 டன்கள் தங்கத்தை பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா வாங்கியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இது மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும். வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் கூற்றுப்படி, கடந்த 17 மாதங்களாக PBC தனது தங்க நகை இருப்புகளை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது எனக் கூறியுள்ளது.
ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின், வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலிலின் மூத்த ஆய்வாளராக பணிபுரியும் கிரிஷன் கோபால், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், PBC பேங்க், 22 டன் தங்கத்தை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
மெட்டல்ஸ் டெய்லியின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ் நார்மன், தி நியூயார்க் டைம்ஸிடம், சீனாவின் இந்த செயல்பாடு தங்கத்தின் விலையை கணிசமாக பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.
சீனா தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்வது தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம், என்று பல நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications