மத்திய அரசு போலி தங்க நகைகள் மற்றும் தரம் குறைவான நகைகளை விற்பனை செய்வதை தடுப்பதற்கும், தங்க நகை விற்பனை துறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பல கட்டுப்பாடுகளை அடுத்தது விதித்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் BIS முத்திரை இல்லாமல் தங்க நகை விற்பனை செய்ய கூடாது என விதிமுறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பல எதிர்ப்புகளை கிளம்பினாலும் மெல்ல மெல்ல நாடு முழுவதும் அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID நம்பர் இல்லாமல் தங்க நகை மற்றும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தங்க நகை விற்பனை துறையில் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
மத்திய அரசு சொல்வது என்ன..? 6 இலக்க HUID நம்பர் என்றால் என்ன..?
பியூஷ் கோயல்
வெள்ளிக்கிழமை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான Bureau of Indian Standards (BIS) அமைப்பின் செயல்பாடுகளை ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டம் முடிந்த பின்பு தான் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID நம்பர் இல்லாமல் தங்க நகை மற்றும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
HUID எண்
ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID) என்பது எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட ஆறு இலக்க எண்ணெழுத்து குறியீடாகும்.
ஹால்மார்க் செய்யும் நேரத்தில் ஒவ்வொரு நகைக்கும் HUID வழங்கப்படும், மேலும் இது ஒவ்வொரு நகைக்கும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.
HUID என்பதன் விரிவாக்கம் Hallmark Unique Identification.
6 இலக்க எண்
அசேயிங் & ஹால்மார்க்கிங் சென்டரில் (AHC) ஒவ்வொரு நகைகளையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தனிப்பட்ட எண்ணுடன் முத்திரையிடப்படும்.
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கு நான்கு இலக்க HUID வழங்கப்படுகிறது. இதை ஆறு இலக்க HUID ஆக மாற்றப்பட உள்ளது. ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
ஹால்மார்க் விதிமுறை
ஹால்மார்க் விதிமுறையை முழுமையாக ஏற்காத பகுதிகளில் கூட வாடிக்கையாளர்கள் இப்புதிய தரத்தை கொண்ட நகைகளுக்கு டிமாண்ட் இருக்கும் காரணத்தால் BIS முத்திரை கொண்ட நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாதையில் கூடுதல் பாதுகாப்பும், மக்களுக்கும் தரமான தங்கத்தை தான் வாங்குகிறோம் என நம்பிக்கையும் அளிக்கம் வகையில் 4 இலக்க HUID 6 இலக்க HUID ஆக மாற்றப்பட்டு உள்ளது.
BIS முத்திரை
இந்தியாவில் தங்க நகை தயாரிப்பு மற்றும் விற்பனை துறையில் தரத்தை பிராதானப்படுத்த வேண்டும் என்பதற்காக BIS முத்திரையை காட்டாயமாக்கப்படுவது மட்டும் அல்லாமல் இதை ஊக்குவிக்க பிஐஎஸ் சர்டிபிகேட் வாங்குவதற்கான கட்டணத்தில் 80 சதவீதம் வரையில் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
288 மாவட்டங்கள்
ஜூன் 16, 2021 முதல் கோல்டு ஹால்மார்கிங் பியூரிட்டி தர சான்றிதழ் நடைமுறையில் உள்ளது, ஆரம்பத்தில் தானாக முன்வந்து ஏற்கும் வகையிலேயே இருந்தது, பின்னாளில் மத்திய அரசு இதை கட்டாயமாக்கியது. 2 கட்டங்களாக இதை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் 288 மாவட்டங்களில் BIS hallmarking நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் 51 மாவட்டங்கள் இணைக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications