2025ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஆண்டு எனக் கூறும் அளவிற்கு உலகம் முழுவதும் தங்கத்தின் விலை ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்து வரக்கூடிய இந்த சூழலில் உலக அளவில் தங்கத்திற்கான டிமாண்ட் எப்படி இருந்ததும் குறிப்பாக இந்தியாவில் தங்க நகைகள் வாங்கும் போது அதிகரித்திருக்கிறதா குறைந்திருக்கிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கிய அறிக்கையை உலக தங்க கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது.
தங்கம் டிமாண்ட்: உலக தங்க கவுன்சில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உலகம் முழுவதும் தங்கத்திற்கான தேவை 3 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கிறது. அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் தங்கத்திற்கான டிமாண்ட் 3 சதவீதம் அதிகரித்து 1249 டன்களாக இருந்தது என தெரிவிக்கிறது. தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்ததற்கு முக்கிய காரணம் கோல்டு ஈடிஎஃப் முதலீடு திட்டங்களே என்றும் உலக தங்க கவுன்சில் வெளியிடும் அறிக்கையை சுட்டிக்காட்டுகிறது.

ஈடிஎஃப் முதலீடுகள் அதிகம்: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதத்தில் 120 டன்கள் மதிப்பிலான தங்கத்திற்கு கோல்டி ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக ஆசிய நாடுகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஈடிஎஃப் திட்டங்கள் தான் அதிக அளவு முதலீடுகளை ஈர்த்துள்ளனர் என தெரிவித்திருக்கிறது. உலக அளவில் கோல்டு ஈடிஎஃப்பில் தங்கத்திற்கான டிமாண்ட் 397 டன்களாக உயர்ந்திருக்கிறது என்றும் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு காலாண்டில் இந்த அளவிற்கு தங்கத்திற்கான டிமாண்ட் உயர்வது இதுவே முதன்முறை என்றும் உலக தங்க கவுன்சிலின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நாணயம் வாங்குவது உயர்வு: அதேவேளையில் தங்க நாணயம் மற்றும் தங்க கட்டிகள் மீது செய்யப்படக்கூடிய முதலீடு என்பது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடம் ஒப்பிடும்போது 11% அதிகரித்து இருக்கிறதாம். மொத்தம் 307 டன்கள் அளவிலான தங்க நாணய மற்றும் பார்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது. வழக்கம் போல தங்கத்தில் முதலீடு செய்ததில் சீனாவை சேர்ந்த முதலீட்டாளர்களே அதிகம் என்றும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 115 டன்கள் வரை சீன முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது ,கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது இது 44% அதிகமாகும்.

இந்தியாவில் எவ்வளவு?: இந்தியாவை பொருத்தவரை தங்க முதலீட்டின் மதிப்பு 46 டன்களாக இருக்கிறதாம். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும் போது இந்த காலாண்டிலும் நீடித்தது என உலக தங்க கவுன்சிலின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பல்வேறு நாடுகளும் 166 டன்கள் தங்கத்தை கூடுதலாக வாங்கி வைத்திருக்கின்றன என தெரிவிக்கிறது.
நகை வாங்குவது குறைந்தது: தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்திருந்தாலும் தங்க நகைக்கான டிமாண்ட் படிப்படியாக குறைந்து வருகிறது என உலக தங்க கவுன்சில் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலக அளவில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு தங்க நகைகளுக்கான தேவை குறைவது இதுவே முதன்முறை என்றும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது உலக அளவில் தங்க நகை நுகர்வு என்பது 14 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது என்றும் கூறுகிறது.
இந்தியாவில் நகை நுகர்வு குறைந்தது: அதாவது மக்கள் தங்கத்தை நகைகளாக வாங்குவது குறைந்துள்ளது. குறிப்பாக சீனாவில் இது 20% குறைந்துள்ளதாகவும் உலகிலேயே அதிகம் தங்க நகை வாங்கக்கூடிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 17 % சரிவு கண்டுள்ளதாகவும் உலக தங்க கவுன்சில அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்ததே நகை வாங்கும் போக்கு குறைய காரணமாகி இருக்கிறது.
6 மாதங்களில் தங்கம் அளித்த லாபம்: சுரங்கங்களில் இருந்து தங்கம் உற்பத்தி செய்யப்படும் விகிதம் என்பது கடந்த 3 மாத காலத்தில் 1249 டன்கள் என 3 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சிறந்த லாபம் தந்த ஒரு முதலீடாக தங்கம் இருக்கிறது என உலக தங்க கவுன்சிலின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது . 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் தங்கத்தின் மதிப்பு 26 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே தங்கத்தின் விலை இருக்கும் என்றும் கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. இருந்தாலும் மேக்ரோ பொருளாதார சூழல்கள் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமையலாம் என தெரிவிக்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications