பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID எண் இல்லாமல் தங்க நகை மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என அறிவித்துள்ளது.
இப்புதிய அறிவிப்பு மூலம் மக்கள் இனி தங்க நகை வாங்க கடைகளுக்கு செல்லும் போது BIS ஹால்மார்க் முத்திரை மட்டும் அல்லாமல் 6 இலக்க HUID இருக்கா என்பதை உறுதி செய்துக்கொண்டு அதன் பின்பே வாங்க வேண்டும். மத்திய அரசு தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்ய பல முயற்சிகளை எடுத்து வரும் வேளையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 4 இலக்க HUID எண்ணை 6 இலக்காக மாற்றியது மட்டும் அல்லாமல் கட்டாயமாக்கியுள்ளது.
இதன் மூலம் இனி நகை கடைகளில் BIS ஹால்மார்க் முத்திரை மற்றும் 6 இலக்க HUID எண் உடன் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய முடியும். மேலும் இதன் மூலம் மக்களுக்கு என்ன பயன்..?!
6 இலக்க HUID எண்
அசேயிங் & ஹால்மார்க்கிங் சென்டரில் (AHC) ஒவ்வொரு நகைகளையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தனிப்பட்ட எண்ணுடன் முத்திரையிடப்படும். HUID என்பதன் விரிவாக்கம் Hallmark Unique Identification. ஹால்மார்க் செய்யும் நேரத்தில் ஒவ்வொரு நகைக்கும் HUID வழங்கப்படும், மேலும் இது ஒவ்வொரு நகைக்கும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.
HUID எப்படி மக்களுக்கு பயன்
HUID வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது, நுகர்வோரின் உரிமைகளை உறுதி செய்கிறது. நுகர்வோர் விவகாரத் துறை இணையதளத்தின்படி, தற்போதுள்ள நகைகளை யார் வேண்டுமானாலும் ஹால்மார்க் செய்து தங்கத்தின் உண்மையான மதிப்பீட்டைப் பெறலாம்.
தூய்மை கண்டறிய முடியும்
HUID என்பது நகை கடைக்காரர்கள் தங்களுடைய தங்க நகைகளின் தூய்மையை உறுதி செய்யும் ஒரு மதிப்பீடு. தங்க நகைகளில் அசேயிங் & ஹால்மார்க்கிங் சென்டரில் (AHC) மார்க் செய்யப்பட்டும் எண்ணெய் கொண்டு அதன் தரத்தை BIS Care App-ல் செக் செய்துக்கொள்ள முடியும்.
புகார்
நகை கடைக்காரர்கள் தங்களுடைய தங்க நகைகளில் போலியான HUID எண்-ஐ அச்சிட்டு இருந்தால் இதே BIS Care App-ல் புகார் அளிக்க முடியும். HUID ஏன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது தெரியுமா..?
பலன்
நுகர்வோர் விவகாரத் துறையின் கூற்றுப்படி, HUID குறியீடு முத்திரையிடப்பட்ட ஒவ்வொரு தங்க நகைகளும் அதற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது. இதன் மூலம் போலியான நகைகளை எளிதில் டிரேஸ் செய்து கண்டுபிடிக்க முடியும்.
BIS அமைப்பு
வெள்ளிக்கிழமை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான Bureau of Indian Standards (BIS) அமைப்பின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டம் முடிந்த பின்பு தான் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID நம்பர் இல்லாமல் தங்க நகை மற்றும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!



Click it and Unblock the Notifications