தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக சரிவில் காணப்படுகின்றது.
சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. எனினும் இது அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது.
ஆக தற்போதைக்கு தங்கம் விலையானது சரிவினைக் கண்டிருந்தாலும், இது மேற்கொண்டு சரியுமா? இந்தியாவில் விலை எப்படியுள்ளது. ஆபரண தங்கம் விலை எப்படி? இனி விலை என்னவாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
விலை குறையலாம்
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், இன்று ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தின் கடைசி நாளாகும். இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்தான முக்கிய முடிவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த அமர்வில் தங்கம் விலையானது 2% மேலாக காணப்பட்டது. இது அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறையீடான 7.1% அதிகரித்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 7.7% ஆக இருந்தது. இது சற்று குறைந்துள்ளதாக தோன்றினாலும், இன்னும் தொடர்ந்து 7% மேலாகவே இருந்து வருகின்றது.
வட்டி விகிதத்தினை ஊக்குவிக்கலாம்
அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடானது மேற்கொண்டு அமெரிக்க மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை ஊக்குவிக்க முக்கிய காரணமாகவும் அமையலாம். எப்படியிருப்பினும் இன்று தங்கத்தில் ஏற்ற இறக்கம் என்பது அதிகளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் வட்டி குறித்தான நடவடிக்கை என்பது இன்னும் சில காலத்திற்கு தொடரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. பணவீக்க விகிதமானது குறையும் வரையில் மத்திய வங்கியின் நடவடிக்கை தொடரும் என அமெரிக்கா ஏற்கனவே கூறியுள்ள நிலையில், இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
மீடியம் டெர்மில் என்னவாகும்?
மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரெசசசனுக்கு மேற்கொண்டு ஊக்குவிக்கலாம். இது தங்கம் விலைக்கு நீண்டகால நோக்கில் மட்டும் அல்ல, மீடியம் டெர்மிலும் அதிகரிக்க வழிவகுக்கலாம். ஆக விலை குறையும்போது பலரும் வாங்க நினைக்கலாம். இதுவும் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை?
எப்படியிருப்பினும் தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 4.30 டாலர்கள் குறைந்து, 1821.25 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் 0.37% குறைந்து, 23.902 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?
இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, 10 கிராமுக்கு, 57 ரூபாய் அதிகரித்து, 54,800 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே இன்று இந்திய சந்தையிலும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது, 190 ரூபாய் அதிகரித்து, கிலோவுக்கு 68,965 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரணத் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 5015 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 40,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 5417 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 250 ரூபாய் குறைந்து, 54,170 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 74 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 74,000 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!



Click it and Unblock the Notifications