தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்றும் சரிவில் காணப்படுகின்றது.
சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது புராபிட் புக்கிங் காரணமாக சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது இது அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது. எனினும் இன்றைய முடிவு விலையை பொறுத்து இது பெரியளவில் சரியுமா என்பதையும் முதலீட்டாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தங்கம் விலையானது தற்போதைக்கு சரிவினைக் கண்டிருந்தாலும், இது மேற்கொண்டு சரியுமா? இந்தியாவில் விலை எப்படியுள்ளது. ஆபரண தங்கம் விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
வட்டி அதிகரிப்பு
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், இன்று பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தின் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளது. இது மேற்கொண்டு தங்கத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்
இந்த வட்டி அதிகரிப்பானது அடுத்த ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கும்போது, இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க வழிவகுக்கலாம்.
பணவீக்கம்
பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் இருக்கும் நிலையில், நீண்டகால நோக்கில் பணவீக்கத்தினை குறைக்கும் வரையிலும் வட்டியில் அதிகரிப்பு இருக்கலாம் என்றாலும், பொருளாதாரம் குறித்த கவலையும் எழுந்துள்ளது.எப்படியிருப்பினும் வட்டி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், இது மீடியம் டெர்மில் தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.
மீடியம் டெர்மில் என்னவாகும்?
தொடர்ந்து தங்கம் விலையானது உச்சத்திலேயே காணப்பட்ட நிலையில் புராபிட் புக்கிங் இருக்கலாம். அதேசமயம் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால் டாலரின் மதிப்பும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் மீடியம் டெர்மில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். ஆக விலை குறையும்போது பலரும் வாங்க நினைக்கலாம். இதுவும் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை?
தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 20.30 டாலர்கள் குறைந்து, 1798.25 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் 3.26% குறைந்து, 23.352 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?
இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, 10 கிராமுக்கு,478 ரூபாய் குறைந்து, 54,196 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இந்திய சந்தையில் மேற்கொண்டு குறைந்து பின்னர், நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது, 1547 ரூபாய் குறைந்து, கிலோவுக்கு 67,755 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணத் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலையும் சரிவிலேயே காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 5060 ரூபாயாகவும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 40,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 44 ரூபாய் குறைந்து, 5520 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 440 ரூபாய் குறைந்து, 55,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1.80 ரூபாய் குறைந்து, 72.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1800 ரூபாய் குறைந்து, 72,200 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications