தங்கம் விலையானது இன்று முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் விதமாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து காணப்பட்டாலும், ஆபரணத் தங்கம் விலையானது இந்தியாவில் சரிவில் காணப்படுகின்றது.
இது தங்க ஆர்வலர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சி என்று தான் கூற வேண்டும்.
தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது, மீண்டும் சற்றே தடுமாறத் தொடங்கியுள்ள நிலையில் தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.
எதிர்பார்ப்பு
இன்று வெளியாகவிருக்கும் பொருளாதார தரவுகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலருக்கு ஆதரவாக இருக்கலாம் என்றாலும், மற்ற பொருளாதார தரவுகள் குறித்த அச்சம் என்பது தொடர்ந்து இருந்து வருகின்றது. ஆக இதற்கிடையில் தான் தங்கம் விலையானது சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது.
7 வார உச்சத்தில் டாலர்
மேலும் கடந்த சில அமர்வுகளாகவே சர்வதேச பங்கு சந்தைகளும் தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையினை ஊக்குவித்துள்ளது.
எப்படியிருப்பினும் இந்த வாரத்தில் மொத்தமாக பார்க்கும்போது தங்கம் விலையானது 0.9% சரிவில் காணப்படுகின்றது. இது டாலரின் மதிப்பானது கடந்த வியாழக்கிழமையன்று 7 வார உச்சத்தில் காணப்பட்டது. இது தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியது. இதனால் தங்கத்தில் முதலீடுகள் என்பது குறைந்தது.
முதலீட்டாளர்கள் கவனம்
அமெரிக்காவின் வேலையில்லாதோர் நலன் குறித்தான எண்ணிக்கையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மீண்டும் பொருளாதாரம் அழுத்தத்தில் தான் உள்ளதோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இதே நிலை தொடர்ந்தால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கலாம். ஆக வரவிருக்கும் தரவுகள் குறித்து முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
பணவீக்கம் Vs தங்கம்
பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. எனினும் பொருளாதாரம் ஏற்கனவே மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6.20 டாலர்கள் அதிகரித்து, 1832.95 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது சற்று குறைந்து, 21.302 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாக காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 143 ரூபாய் அதிகரித்து, 55,730 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 36 ரூபாய் குறைந்து, 64,315 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5235 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 41,880 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5711 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 57,110 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று சரிவில் காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 60 பைசா குறைந்து, 70.90 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 70,900 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?



Click it and Unblock the Notifications