தங்க விலை எவ்வளவு கூடினாலும் எங்களுக்கு கவலையில்லை.. 20% வரை உயர்ந்த நகை கடை பங்குகள்..!

கடந்த பிப்ரவரி வரையிலாக கடந்த 5 மாதங்களாக பங்குச் சந்தைகள் சரிவின் பாதையில் இருந்தது. அதேவேளையில், அதிகரித்து வரும் தங்க விலையின் காரணமாக நகை துறையை சேர்ந்த பங்குகள் பலத்த அடி வாங்கின. ஆனால் கடந்த வாரத்தில் செனகோ கோல்ட், கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட சில நகை பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்தன.

2025 மார்ச் காலாண்டு குறித்து அந்த நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன. அதிக விலை காரணமாக விற்பனை அளவு குறைந்துவிட்டாலும், அதிக விலை வருவாய் வளர்ச்சிக்கு உதவும் என்று நகை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மேலும் தங்களது விரிவாக்க நடவடிக்கைகளும் அதிகரித்து வரும் பரிவர்த்தனை மதிப்புகளும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக உள்ளன.

தங்க விலை எவ்வளவு கூடினாலும் எங்களுக்கு கவலையில்லை.. 20% வரை உயர்ந்த நகை கடை பங்குகள்..!

சென்கோ கோல்ட்: சென்கோ கோல்ட் லிமிடெட் நிறுவனம் தங்க நகை சில்லரை விற்பனையாளர். நாடு முழுவதும் 165க்கும் மேற்பட்ட கடைகளை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சங்கிலித் தொடர் நகை சில்லரை விற்பனை நிறுவனமாகும். கடந்த வாரம் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை 19.6 சதவீதம் அதிகரித்தது. அதேசமயம் இதே காலத்தில் நிஃப்டி 5.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.01 சதவீதம் குறைந்து ரூ.285.50ஆக இருந்தது.

கல்யாண் ஜூவல்லர்ஸ்: நாட்டின் முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்று கல்யாண் ஜூவல்லர்ஸ். கடந்த வாரம் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு விலை 13.7 சதவீதம் உயர்ந்தது. இந்நிறுவனத்தின் வலுவான கடை விரிவாக்கம் திட்டம் மற்றும் கடந்த டிசம்பர் காலாண்டில் கடை விற்பனை 16 சதவீதம் வளர்ச்சி கண்டது போன்றவற்றால் இப்பங்கு ஏற்றம் கண்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.77 சதவீதம் உயர்ந்து ரூ.477.70ஆக இருந்தது.

பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ்: கடந்த வாரத்தில் பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் நிறுவன பங்கின் விலை 9 சதவீதம் உயர்ந்தது. இளம் வாடிக்கையாளர்களுக்கான அதன் புதிய லைட்ஸ்டைல் வடிவம் கவனத்தை ஈர்த்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.73 சதவீதம் குறைந்து ரூ.523.10ஆக இருந்தது.

தங்கமயில் ஜூவல்லரி: கடந்த வாரம் தங்கமயில் ஜூவல்லரி பங்கு விலை 6.8 சதவீதம் உயர்ந்தது. கடை விற்பனை வளர்ச்சியில் சரிவு இருந்தபோதும், அதன் சமீபத்திய இழப்புகளில் சிலவற்றை மீட்டெடுத்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.19 சதவீதம் உயர்ந்து ரூ.1,852.00ஆக இருந்தது.

டைட்டன்: கடந்த வாரத்தில் டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் கம்பெனி பங்கு விலை 2.3 சதவீதம் ஏற்றம் கண்டது. இந்நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் புதிதாக 46 கடைகளை தொடங்கியுள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.23 சதவீதம் உயர்ந்து ரூ.3,062.20ஆக இருந்தது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+