தங்கத்தில் முதலீடு செய்யும் போது, நகைகளாக வாங்குவது சிறந்ததா..? அல்லது தங்க ETF (Exchange Traded Fund) களில் முதலீடு செய்வது சிறந்ததா..? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நிதி நிபுணரும் CA-வுமான நிதின் கௌஷிக் தங்க முதலீடு தொடர்பாக முக்கியமான சில விவரங்களை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தங்க நகையும், தங்க ETF-யும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும், எது புத்திசாலித்தனமான முதலீடு என்பதையும் எளிமையாக விளக்கி காட்டியுள்ளார்.
தங்க நகை முதலீடு: தங்கத்தின் விலை ரூ.1,00,000 என்று வைத்துக் கொள்வோம். இதில் சுமார் ரூ.12,000 வரை மேக்கிங் சார்ஜ், ஜிஎஸ்டி, மற்ற கட்டணங்கள் ஆகியவற்றிற்கு போய்விடும். அதேபோல், தங்க நகையை முதலீடாக வாங்கும் போது, அதில் நெகிழ்வுத்தன்மை காணப்படுவதில்லை. அதாவது, நகையின் வடிவம் (design) உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்காது. அதேபோல், தேவையில்லை என்று முடிவு செய்தபின் மறுவிற்பனை செய்வதும் சிரமமாகவே இருக்கும். பல நகைக்கடைகள் resale செய்த நகைகளில் குறைவான விலை மட்டுமே வழங்குகின்றன. மேக்கிங் சார்ஜ் உள்ளிட்ட கட்டணங்கள் திரும்ப கிடைக்காது என்பதும் கூடுதல் சிக்கலாக இருக்கிறது.

அதேபோல், தங்க நகையில் முதலீடு செய்த பிறகு, அதன் மதிப்பு எதிர்காலத்தில் எவ்வளவு returns தரும் என்பது முன்கூட்டியே கணிக்க முடியாது. தங்க விலை அதிகரித்தாலும், நகையின் resale விலை அதற்கேற்ப கிடைக்க வாய்ப்பில்லை. இதில் சில மறைக்கப்பட்ட கட்டணங்களும் இருக்கலாம். உண்மையான மதிப்பில் இருந்து பெரும் பகுதியை கழித்துவிடுகிறார்கள். இதனால், முதலீட்டாளருக்கு வருவாய் குறைவாகவே இருக்கும்.
தங்க ETF முதலீடு: தங்கத்தின் விலை ரூ.1,00,000 என்று வைத்துக் கொள்வோம். இதில் வீண் செலவுகள் எதுவும் இருக்காது. தங்க ETF-ல் முதலீடு செய்தால் அதனை எந்த நேரத்திலும், உடனடியாக விற்பனை செய்ய முடியும். இது உடனடி லிக்விடிட்டி (instant liquidity) எனப்படும். தேவையான போது செலவுகளின்றி, இணையவழியாக அல்லது உங்கள் டிமாட் கணக்கின் மூலம் நேரடியாக தங்க ETF-ஐ விற்று பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதில் எந்தவிதமான design, purity, resale discussion போன்ற சிக்கல்களும் இல்லை என்பதால், இது ஒரு நிதியாக நெருக்கடியான நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
தங்க ETF-ல் முதலீடு செய்தால், அதில் இருந்து கிடைக்கும் வருமானம் (returns) முழுமையாக வெளிப்படையானது மற்றும் மார்க்கெட்டின் நிலவரத்தைப் பொருத்தே கணிக்கப்படும். இதில் தங்க நகையை போல தட்டுப்பாடுகளோ, மறைமுகக் கழிவுகளோ இல்லாமல் இருக்கும். மேலும், உங்கள் முதலீடு 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தால், வருமான வரி கட்டணம் குறைக்கப்படும் Indexation Benefit எனப்படும் வரிச்சலுகையும் கிடைக்கும். இதனால், ETF முதலீடு சிறந்த வருமானத்தையும், வரிச் சிக்கலின்றி நிதிநிலை வலுப்படுத்துதலையும் தரக்கூடியது.
நிதி நிபுணரும் CA-வுமான நிதின் கௌஷிக் வெளியிட்டுள்ள பதிவில், "நகையாக தங்கம் வாங்குவது ஒரு உணர்ச்சி சார்ந்த முடிவாக இருக்கலாம். ஆனால், அது நிதிநிலை வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் முதலீடு என்று கருத முடியாது. இது ஒரு ஆடம்பர செலவு" என்று தெரிவித்துள்ளார். மேலும், "ஒரு வகை தங்கம் உணர்ச்சிக்காகவோ, பாரம்பரியத்திற்காகவோ அணியும் பொருளாகும். மற்றொரு வகை தங்கம் நிதி வளர்ச்சிக்கான ஒரு முதலீட்டு வாய்ப்பாகும். தங்கம் என்பது பாரம்பரியம். ஆனால், அதில் முதலீடு செய்வது செல்வத்தை அதிகரிக்கும். உங்கள் கையில் மட்டுமல்ல, உங்கள் பணத்தையும் பிரகாசப்படுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
உச்சம் தொட்ட தங்கம் விலை : தங்கத்தின் விலை தற்போது சுமார் ரூ.1 லட்சம் வரை சென்றுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல் - இரான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தங்கம் MCX-ல் வரலாற்றில் முதன்முறையாக உச்ச விலையை தொட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த ceasefire (போர் நிறைவு உடன்பாடு) காரணமாக, தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இஸ்ரேலும், ஈரானும் உடனடி சமாதானத்தில் இணைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications