இந்தியாவில் பண்டிகை காலம் வந்துவிட்டாலே நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தான், அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் ஓனம், விநாயகர் சதுர்த்தி, ரக்ஷா பந்தன், அதை தொடர்ந்து வந்த ஈகாமஸ் ஷாப்பிங் திருவிழா காலத்தில், கடந்த வருடத்தை காட்டிலும் 2-4 மடங்கு அதிக வர்த்தகத்தை ரீடைல் சந்தை பெற்றன.
இந்த ஆண்டு நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் யாரும் எதிர்பார்க்காத வர்த்தகம் வரும் என அனைத்து ரீடைல் நிறுவனங்களும் தயாராக இருந்தது. ஆனால் களம் 8ல் பெரும் அடி என்று தான் சொல்ல வேண்டும். ரீடைல் சந்தை எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று.

இந்த தசரா மற்றும் நவராத்திரி பண்டிகையின் போது தங்க நகை விற்பனை என்பது கடந்த ஆண்டுக்கு இணையான அளவிலேயே இருந்ததாகவும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நகை விற்பனையில் வளர்ச்சி அடையவில்லை எனவும் நாடு முழுவதும் இருக்கும் நகை கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், அதிகப்படியான தங்கம் விலை காரணமாக இந்த பண்டிகை காலத்தில் மக்கள் பொதுவாக வாங்கும் தங்க நகை அளவு குறைந்தது மட்டும் அல்லாமல் அதிகப்படியான மக்கள் 9 கேரட் தங்கம், வைரம் பதித்த தங்க நகைகளை அதிகம் வாங்கியுள்ளதாக நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் எடை அளவிலான தங்கம் விற்பனை என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது, ஆனால் அட்சய திருதியை பண்டிகையின் போது அதிகளவில் விற்கப்படும் என நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்க நகை விற்பனை போலவே கார் விற்பனையும் தசரா மற்றும் நவராத்திரி பண்டிகையின் போது அதிரடியாக குறைந்துள்ளது.
இந்த ஆண்டு விற்பனை படு பயங்கரமாக இருக்கும் என பெரிதும் நம்பப்பட்ட நிலையில் அக்டோபர் 1-20ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வாகனங்களின் பதிவு கடந்த ஆண்டை காட்டிலும் 21.9 சதவீதம் குறைந்து 1.83 லட்சம் பயணிகள் வாகனங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது என கார் டீலர்ஸ் அமைப்பான FADA தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு GST 2.0 அறிமுகமானது மூலம் கார்கள் மீதான வரியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதிகளவில் விற்பனையானது, ஆனால் இந்த ஆண்டு இதேபோன்ற தாக்கத்தை சந்தையில் உருவாக்கவில்லை என்பதே தற்போதயை பிரச்சனை.
பல நிறுவனங்கள் புக்கிங் அதிகமாக பெற்று இருந்தாலும் போதுமான கார்கள் உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் டெலிவரி செய்ய முடியாமல் போயுள்ளது, இதில் முக்கியமாக மாருதி சுசூகி பாதிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications