ஈரான் போர் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் மத்திய அரசின் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு ஆகிய இரண்டு காரணிகள் மே மாதம் முழுவதுமே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தின.
சென்னையில் இன்றைய தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1,17,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 15, 960 ரூபாய்க்கும் 10 கிராம் 1, 59,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,275 ரூபாய்க்கும் ஒரு சவரன் 98,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மே மாதம் முழுவதுமே தங்கம் விலை ஏறுவது இறங்குவது என பல்வேறு மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. மே 1ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதத்தில் அதிகபட்சமாக மே 14ஆம் தேதி அன்று 15,050 ரூபாய் என உச்சபட்ச விலை தொட்டது அதன் பிறகு படிப்படியாக சரிந்து இன்றைய தினம் 14, 630 ரூபாயாக இருக்கிறது. அதாவது மே ஒன்றாம் தேதியுடன் ஒப்பிடும்போது இந்த 31 நாளில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 710 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது ஒரு சவரனுக்கு 5680 ரூபாய் தங்கத்தின் விலை கூடியிருக்கிறது.
அதே வேளையில் வெள்ளியின் விலை பார்க்கும்போது இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 .9 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாக. மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ஒரு கிராம் தங்கம் 265 ரூபாய் என இருந்தது, ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் என விற்கப்பட்டது. மே 13ஆம் தேதி அதிகபட்சமாக தங்கம் விலை ஒரு கிராம் 320 ரூபாய் ஒரு கிலோ 3,20,000 ரூபாய் என உச்சத்தை தொட்டது.
மே 1ஆம் தேதி நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை கூடி இருக்கிறது. ஒரு கிலோவுக்கு 25 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் மே மாதத்தில் அதிகபட்ச விலை எட்டி சரிவடைந்ததற்கு முக்கிய காரணம் மத்திய அரசு மக்கள் தங்கம், வெள்ளி வாங்குவதை குறைக்கும் பொருட்டு தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை திடீரென 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.
மே மாதத்தில் சத்தமே இல்லாமல் தங்கமும் வெள்ளியும் இப்படி பல மடங்கு விலை உயர்வு கண்டிருக்கின்றன. ஜூன் மாதம் எப்படி இருக்கும் என்பது தான் பெரும்பாலான மக்களுக்கு இருக்கக்கூடிய கவலை. ஜூன் மாதத்தை பொறுத்தவரை ஈரான் போர் தீவிரமடைந்தால் தங்கத்தின் விலை குறையும் அமைதியான சூழலை நோக்கி செல்கிறது எனும் போது தங்கத்தின் விலை உயரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

