இந்தியாவில் தங்கம் எப்போதும் வெறும் ஆபரணமாக இல்லாமல் ஒரு முக்கிய முதலீடாக பார்க்கும் கண்ணோட்டத்தை கொண்டு உள்ளனர். இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அவசர காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறையாகவும் இருக்கிறது.
தங்கத்தை வெறுமனே வீட்டில் வைத்திருப்பது பல்வேறு சிக்கல்களைக் கொண்டிருக்கும் அதே வேளையில், மாறிவரும் காலப்போக்கில், தங்கத்தை பல முதலீட்டு விருப்பமாக மாற்றப்பட்டு பல புதிய வழியில் முதலீட்டு வடிவத்திற்கு மாறியுள்ளது.

டிஜிட்டல் தங்கம் மற்றும் சவ்ரின் தங்கப் பத்திரங்களைப் பற்றி நீங்கள் நினைத்தால், தவறில்லை. ஆனால் தங்கத்தில் இருந்து சம்பாதிக்க வேறு வழி இருப்பதாகச் சொன்னால் என்ன செய்வீர்கள்? எப்படி என்று யோசிக்கிறீர்களா? இதற்கான பதில் தங்க குத்தகை எனப்படும் Gold Leasing முறை.
ஒரு வீட்டை அல்லது கடை அல்லது வாகனத்தை குத்தகை விடுவது போல் தங்கத்தையும் குத்தகைக்கும் விட்டு பணம் சம்பாதிக்கும் புதிய முதலீட்டு முறை பிரபலமாகி வருகிறது. இது முதலீட்டாளர்கள் தங்களுடைய கையிருப்பில் இருக்கும் தங்க சேமிப்பில் வருமானம் ஈட்டும் வாய்ப்பை அளிக்கிறது. கேட்கவே பயங்கரமாக இருக்கா..?
தங்க நகைக்கடைக்காரர்களுக்கு தங்களுடைய அன்றாட வணிக நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் தங்கத்தை நகைக்கடைக்காரர்களுக்கு குத்தகைக்கு விடப்படுவது மூலம் இது சாத்தியமாகிறது.
அதாவது நீங்கள் ஒரு தங்கை நகை கடைக்காரர்களுக்கு தங்கத்தை குத்தகையாக கொடுக்கிறீர்கள் எனில், அந்த தங்கம் தான் நீங்கள் செய்த மூலதனம். இதை அடிப்படையாக வைத்து நகைக் கடைக்காரர்கள் உங்களிடம் கடன் வாங்கிய தங்கத்திற்கு வட்டி தருகிறார்கள்.
இந்த வட்டியை சிலர் பணமாகவும், சிலர் தங்கமாகவே கொடுக்கிறார்கள். அதாவது 10 கிராம் தங்கத்தை முதலீடு செய்தால் சில குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு 15 கிராம், 20 கிராம் தங்கம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
இந்த வட்டி 4-5% வரை இருக்கும். இந்த வட்டி கணக்கீட்டை நாள் அடிப்படையில் கணக்கிட்டு மாதாந்திர அடிப்படையில் இதற்கான டிஜிட்டல் கணக்கில் தான் வைப்பு செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்போது இந்த தங்க குத்தகை முறை டிஜிட்டல் முறையில் மட்டுமே நடந்து வருகிறது.

அதாவது தங்க குத்தகைக்கான தளத்தில் டிஜிட்டல் முறையில் வாங்கப்பட்ட தங்கத்தை இங்கு டெபாசிட் செய்து அதற்கான வட்டி வருமானம் அளிக்கப்படும். இது டிஜிட்டல் தளத்தில் நடக்கும் சேவை என்பதால் 10 ரூபாய்க்கு தங்கத்தை வாங்கி கூட இதில் டெபாசிட் செய்து பணம் பார்க்க முடியும்.
Gold Leasing என்பது இந்தியாவில் பிரபலமாகி வரும் புதிய முதலீடுகள், இதனால் பல பாதுகாப்பு அச்சங்கள் உள்ளது. மேலும் இந்த Gold Leasing முறைக்கு இதுவரையில் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இத்தகைய முதலீட்டு முறையின் கீழ் யாரேனும் உங்களை அணுகினால் உஷாராக செயல்படுங்கள்.


Click it and Unblock the Notifications