இந்தியாவில் விலைவாசி அதிகரித்துள்ள வேளையில், மக்கள் தங்கள் செலவுகளைச் சமாளிக்கவும், முக்கியமான முதலீடுகளைச் செய்யவும், தங்கம் விலை வரலாற்று உச்சத்தை அடைந்துள்ள தருணத்தைப் பயன்படுத்தி லாபகரமாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதன் வாயிலாக மக்கள் அதிகளவில் தங்க கடன்களை வங்கியில் வாங்கி வரும் நிலையில், வங்கிகளில் தங்க கடன் பிரிவில் மாபெரும் வளர்ச்சி பதிவாகியுள்ளது.
தங்கம் விலை உயர்வு மற்றும் வங்கிகள் மீது RBI-யின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய மக்கள் தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுவது அதிகரித்துள்ளது. இதேபோல் வங்கிகளும் அதிகளவிலான கடன்களை அளித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், அதாவது ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான 6 மாத காலகட்டத்தில் வங்கிகளில் தங்க கடன் விநியோகம் என்பது சுமார் 43.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் செப்டம்பர் 2024 மாதம் மட்டும் ரூ.1,47,081 கோடி தொகையைத் தங்கம் மீதான கடன்களாக வழங்கப்பட்டு உள்ளது, மார்ச் 2024ல் 1,02,562 கோடியாக மட்டுமே இருந்தது. NBFC-ல் கொடுக்கப்பட்ட கடன்களையும் சேர்த்துக்கொண்டால் 3 லட்சம் கோடிக்கும் அதிகமாகப் பணம் செப்டம்பர் மாதம் மட்டும் வழங்கப்பட்டு உள்ளது.
முதலாவதாக, தங்கம் விலையின் தொடர்ச்சியான உயர்வு, தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெற மக்களை ஊக்குவித்துள்ளது. தங்க விலை உயரும்போது, கடன் மதிப்பு (LTV) விகிதம் அதிகரிக்கிறது, இதனால் கடன் வாங்கியவர்கள் தங்கள் தங்க நகையின் மீது கூடுதலாகக் கடன் பெற முடியும்.
இரண்டாவதாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கக் கடன் பிரிவில் சில குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து, வங்கிகள் தங்கள் கடன் வழங்கும் தரநிலைகளைக் கடுமையாக்கியுள்ளன. இதனால், நம்பகமான மற்றும் நம்பத்தகுந்ததாகக் கருதப்படும் நிறுவனமான வங்கிகளை நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
குறிப்பாக தங்கக் கடன்களில் கிங்மேக்கராக இருக்கும் நிதி நிறுவனங்கள் (NBFC)களும் இந்த பிரிவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்துள்ளன. இந்தத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Muthoot Finance, மார்ச் 2024 நிலவரப்படி ரூ.75,827 கோடி தங்கக் கடன் சொத்துக்களை நிர்வகித்து வருகிறது, மேலும் வாடிக்கையாளர்களால் அடமானம் வைக்கப்பட்ட 188 டன் தங்கத்தை வைத்திருக்கிறது.
தங்கக் கடன் சந்தையில் RBI-யின் சமீபத்திய கட்டுப்பாடுகள் விதிக்க முக்கியமான காரணம், NBFC-கள் நியமிக்கும் 3ஆம் தரப்பு நிறுவனங்கள் தான், இவை தங்க கடன் வழங்குவதில் அதிகப்படியான முறைகேடுகளும், விதிமீறல்களும் செய்வது மட்டும் அல்லாமல் பெறாத தங்கத்திற்குக் கடன் கொடுப்பது, அடமானமாக பெற்ற தங்க நகைகளை ஏலம் விடும்போது விதிமுறைகளை மீறியது உட்படப் பல விஷயங்களை ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!



Click it and Unblock the Notifications