சென்னை: தங்கக் கடன் பெறுவது பெரும்பாலானோருக்கு ஏற்ற ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், வங்கிகளுக்கு சென்று தேவைப்படும் ஆவணங்களை ஒப்படைத்து பெரும் தனிநபர் கடன்களை விட அவரவர்களிடம் இருக்கும் நகைகளை கொண்டு பெறும் கடன் எளிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுவும் இந்தியாவில் பாரம்பரியமாக நகைகளை சேர்க்கும் குடும்பங்கள் அதிகம். இதனால் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் அந்த நகைகளை வைத்து கடன்களைப் பெற முடியும். இந்த பதிவில் 2024ஆம் ஆண்டில் வங்கிகள் தங்க கடனுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.
தங்கத்தை வைத்து நாம் பெறக்கூடிய கடன் எளிதானதாக இருக்கிறது மற்றும் உடனடியாக நாம் பெறக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எக்கனாமிக் டைம்ஸ் தரவுகளின் படி வங்கிகள் வழங்கும் தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.

எஸ்பிஐ பேங்க் (SBI) வழங்கும் தங்க கடன் வட்டி விகிதங்கள்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தங்க கடன்களுக்கு மிகவும் பிரபலமான வங்கி. 2024ஆம் ஆண்டில் எஸ்பிஐ தங்க கடன் வட்டி விகிதம் 8.65 சதவீதம் முதல் 9.90 சதவீதம் வரை இருக்கும்.
ஹெச்டிஎப்சி பேங்க் (HDFC) வழங்கும் தங்க கடன் வட்டி விகிதங்கள்: ஹெச்டிஎப்சி பேங்க், வாடிக்கையாளர்களுக்கு 9 சதவீதம் முதல் தங்க கடன் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது ரூ. 25,000 முதலான தங்க கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஆகும்.
பிஎன்பி பேங்க் (PNB) வழங்கும் தங்க கடன் வட்டி விகிதங்கள்: பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB), தங்க கடன்களுக்கு 9.25 சதவீதம் முதல் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது ரூ. 25,000 முதல் ரூ. 25 லட்சம் வரையிலான தங்க கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஆகும்.
ஆக்சிஸ் பேங்க் (Axis) வழங்கும் தங்க கடன் வட்டி விகிதங்கள்: ஆக்சிஸ் பேங்க், தங்க கடன்களுக்கான வட்டி விகிதத்தை 9.30 சதவீதம் முதல் நிர்ணயித்துள்ளது. இது ரூ. 25,000 முதல் ரூ. 25 லட்சம் வரையிலான தங்க கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஆகும்.
பேங்க் ஆஃப் பரோடா (BoB) வழங்கும் தங்க கடன் வட்டி விகிதங்கள்: பேங்க் ஆஃப் பரோடா (BoB), தங்க கடன்களுக்கு 9.40 சதவீதம் முதல் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஐசிஐசிஐ பேங்க் (ICICI) வழங்கும் தங்க கடன் வட்டி விகிதங்கள்: ஐசிஐசிஐ பேங்க், தங்க கடன்களுக்கான வட்டி விகிதத்தை 9 சதவீதம் முதல் நிர்ணயித்துள்ளது.
தகுதி: தங்க கடன்களை பெறுவதற்கு 18 முதல் 75 வயது உடைய யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இந்த கடன்கள் உங்கள் தங்க மதிப்பின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
திருப்பி செலுத்தும் விருப்பங்கள்: நீங்கள் இந்தக் கடனை திருப்பிச் செலுத்த மூன்று வழிகள் உள்ளன.
புல்லட் ரீ-பேமெண்ட்: இந்த முறையில் நீங்கள் ஒட்டுமொத்தமாக வாங்கிய கடன் மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரே கட்டணமாக செலுத்தி உங்கள் நகைகளை திருப்பிக் கொள்ளலாம்.
EMI: நீங்கள் வாங்கிய கடனை மாதமாதம் EMI தொகையாகக் கூட செலுத்த முடியும். இதன் மூலம் உங்கள் நகையை மீட்பது சுலபமாக இருக்கும். ஏனென்றால், நீங்கள் கடன் வாங்கும் போது ஒரு பெரிய தொகையை வாங்கி இருந்தால் மாதம் மாதம் செலுத்தும் போது எளிதானதாகத் தோன்றலாம்.
மாதாந்திர வட்டியை திருப்பி செலுத்துதல்: வட்டியை மாதம் தோறும் செலுத்தலாம். இதன் மூலம் கடன் காலத்தின் முடிவில், நீங்கள் அசல் தொகையை மட்டும் கொடுத்து உங்களுடைய நகைகளை திருப்பிக் கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications