சென்னை: இந்தியாவில் சாதாரண மக்களை பொருத்தவரை தங்கம் என்பது ஒரு முதலீடு மட்டும் கிடையாது, ஒரு அவசர பண தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய ஒரு பொருள். மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஒரு அவசர பண தேவை ஏற்பட்டால் உடனடியாக வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிடமோ தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்வார்கள் .
தங்க நகை கடன்: தனிநபர் கடன், வீட்டுகடன், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடும் போது நகையை அடகு வைத்து கடன் வாங்குவது எளிமையானதாக இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் மீது கடன் வாங்கும் போக்கு அதிகரித்து இருக்கிறதாம். 2025 மார்ச் 21ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் தங்க நகைகளின் மீது வாங்கப்பட்டிருக்கும் கடன்களின் மொத்த மதிப்பு 2.08 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.3 லட்சம் கோடி ரூபாயாகத்தான் இருந்தது.

அதிகரிக்கும் நகை கடன்: இந்தியாவில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கும் போக்கு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தரவுகள் குறிப்பிடுகின்றன. தங்கத்தின் விலை அதிகரித்திருப்பது, ரிசர்வ் வங்கி கடன்கள் வாங்கும் நடைமுறையில் கொண்டு வந்திருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவையே தங்க நகை கடன்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விலை உயர்வதால் கடனும் உயர்வு: தனிநபர் கடன் பெறுவது மற்றும் சிறு கடன்கள் பெறுவதில் பல்வேறு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்பதால் மக்கள் இயற்கையாகவே தங்க நகை கடன்களை நோக்கி தான் வருகிறார்கள் என உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சஞ்சீவ் நாட்டியால் தெரிவிக்கிறார். 2020 மார்ச் முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் பார்த்தால் இந்தியாவில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கும் விகிதம் ஆண்டுக்கு 44% என்ற வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
5 ஆண்டுகளில் எவ்வளவு உயர்வு: கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 122 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2020 மார்ச்சில் இந்தியாவில் தங்க கடன்களின் மொத்த மதிப்பு 33,257 கோடி ரூபாய் தான் அதுவே இந்த ஆண்டு மார்ச் மாதம் 2 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்த இதே காலகட்டத்தில் தங்கத்தின் விலை பார்த்தால் 10 கிராம் தங்கத்தின் விலை 2020 மார்சில் 38, 600 ரூபாய் என இருந்து தற்போது 85, 800 ரூபாய் என உயர்ந்திருக்கிறது.
மக்கள் என்ன செய்கிறார்கள்: தங்கத்தின் விலை ஏறும் போது பெரும்பாலான மக்கள் ஏற்கனவே அடகு வைத்த நகையை மீட்டு மீண்டும் அதனை அதிக விலைக்கு அடகு வைத்து கடன் வாங்குகிறார்கள் என நிதி நிறுவனங்கள் கூறுகின்றன. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் தங்கத்தின் மீதான கடன் வழங்குவது என்பது மற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பானதாக இருப்பதால் அவர்களும் அதைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியில் தங்கத்தின் மீதான கடன் என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 53 சதவீதம் அதிகரித்து 50,000 கோடியாக உயர்ந்திருக்கிறது, முத்தூட் பைனான்ஸ் கம்பெனியில் தங்கத்தின் மீதான கடன் அளவு என்பது 1 லட்சம் கோடியை கடந்து இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications