பங்குச்சந்தை, கிரிப்டோ, ரியல் எஸ்டேட் என அனைத்து முக்கிய சொத்துக்களை தாண்டி இப்போது தங்கம், வெள்ளி முக்கிய முதலீடாக மாறியுள்ளது. ஒருப்பக்கம் டாலர் மதிப்பு குறைவதும், பங்குச்சந்தையில் அதிகப்படியான ஏற்ற இறக்கம் இருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், புவிசார் அரசியல் பிரச்சனைகளும், போர் அச்சமும் தான் இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
புதன்கிழமை அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என அறிவித்த பிறகும் தங்கம், வெள்ளி விலை சர்வதேச சந்தையில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இதற்கு 2 முக்கியமான விஷயம் அடிப்படை காரணமாக உள்ளது.

தங்க விலை வியாழக்கிழமை (ஜனவரி 29, 2026) ஆசிய வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியது. ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை 5,600ஐ முதல் முறையாக தொட்டது. பின்னர் சற்று சரிந்து $5,525 அருகே வர்த்தகமானது. புவிசார் அச்சங்கள், பொருளாதார நிச்சயமின்மை மற்றும் அமெரிக்க டாலரின் பலவீனம் ஆகியவை தங்கத்தின் மீதான முதலீட்டை அவசியமாக்கியுள்ளது.
மேலும் டிரம்ப் அரசும் டாலர் மதிப்பு தொடர்ந்து சரிவதை கண்டுக்கொள்ளவில்லை, இதற்கான எதிர்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நேற்றைய டிரம்ப்-ந் பேச்சு மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் இன்று உள்நாட்டு சந்தையிலும் சரி, சர்வதேச சந்தையிலும் தங்கம் - வெள்ளி விலை தடாலடியாக உயர்ந்துள்ளது.
இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக கூடுதலாக இன்று சரிந்துள்ளது. ரூபாய் 91.9650ஐ கடந்து புதிய குறைந்த அளவை எட்டியது. டாலர் மதிப்பின் சரிவு உலகளாவிய சந்தைகளில் தங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டாலும், ரூபாய் வீழ்ச்சி இந்தியாவில் தங்க விலையை மேலும் உயர்த்துகிறது. இது நகை வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். "புதிய அணு ஒப்பந்தத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அடுத்த தாக்குதல் மிக மோசமாக இருக்கும்" என்று அவர் கூறினார். மேலும் மிகப்பெரிய அமெரிக்க கடற்படை குழு ஈரான் நோக்கி செல்வதாகவும் தெரிவித்தார். இந்த அரசியல் பதற்றம் தான் உலகளாவில் முதலீட்டாளர்களை பாதுகாப்பான சொத்துகளில் முதலீடு செய்ய தூண்டுகிறது.
இதேவேளையில் புதன்கிழமை அமெரிக்கா, கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்துக்கு எதிராக விடுத்த அச்சுறுத்தலை தீர்க்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
கிரீன்லாந்து டென்மார்க்கின் தன்னாட்சி பகுதியாக இருக்கும் நிலையில், டிரம்ப் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கிரீன்லாந்தை வாங்குவது குறித்து பேசியது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் அமெரிக்கா - ஐரோப்பா மத்தியிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்கா -டென்மார்க் ஆகிய இரு நாடுகளும் நேட்டோவின் உறுப்பினர்கள் என்பதால் இந்த மோதல் கூட்டணிக்குள் பிளவை உருவாக்கியது.
தங்கத்தின் இந்த தொடர் உயர்வு உலகளாவிய முதலீட்டாளர்களிடையே பாதுகாப்பு தேடலை பிரதிபலிக்கிறது. டாலர் பலவீனமடைவதால் தங்கம் மேலும் வலுப்படுகிறது. இந்தியாவில் தங்க விலை உயர்வுக்கு திருமண சீசன் மற்றும் முதலீட்டாளர்கள் பாதிப்பை தேடும் முயற்சி முக்கியமான காரணமாக உள்ளது. இதேபோல் தங்க நகை விலை உயர்வால் நகை கடைகளில் வர்த்தகம் 60-70 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக தெரிகிறது.
சிறு நகரங்களில் இருக்கும் பல கடைகளில் வர்த்தகமே இல்லாத நிலையும் உள்ளது என்பது வருத்தமான செய்தியாகும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!



Click it and Unblock the Notifications