இந்தியா என்கிற மிகப் பெரிய நாட்டில், கடவுள் தொடங்கி, மனிதர்கள் வரை அனைவருக்கும் தங்கம் ஒரு அத்தியாவசியம்.
சுமார் 130 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் ஆளுக்கு ஒரு பவுன் நகை என்றால் கூட இந்தியர்கள் வீட்டில் எவ்வளவு தங்கம் இருக்கும் என கணக்கு போட்டுப் பாருங்கள்.

இந்த தங்கம் தான், அடித்தட்டு மக்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு அற்புத வரம் கூட. இப்படி குடும்ப கெளரவம் தொடங்கி, பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் ஒரு உற்ற நண்பனாக இருந்து வருகிறது தங்கம். இந்தியர்களைப் பொறுத்த வரை தங்கம் இன்றி அமையாது உலகு. சரி சென்னையில் தங்கத்தின் விலை நிலவரத்துக்கு வருவோம்.
சென்னையில், கடந்த நவம்பர் 02, 2019 அன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 3,705 ரூபாய்க்கு விற்றது. ஆக ஒரு பவுன் 29,640-க்கு விற்கப்பட்டது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,041 ரூபாய்க்கு விற்றார்கள். ஆக ஒரு பவுன் விலை 32,328-க்கு விற்பனை ஆனது. இந்த விலையில் இருந்து கொஞ்சம் சரிந்து மீண்டும் ஒரு விலை உச்சத்தை தொட்டது என்றால் அது நவம்பர் 14, 2019 தான்.
ஆக கடந்த நவம்பர் 14, 2019 அன்று, சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,662-க்கு விற்பனை ஆனது. அதே நாளில் ஒரு பவுன் தங்கத்துக்கு 29,296 ரூபாய் விலை கொடுக்க வேண்டி இருந்தது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,994 ரூபாய்க்கு விற்றார்கள். ஒரு பவுன் தங்கத்தின் விலை 31,952 ரூபாயைத் தொட்டது. இந்த இரண்டாவது ஏற்றத்துக்குப் பின் இன்று விலை கொஞ்சம் குறைந்து இருக்கிறது.
இன்று, நவம்பர் 29, 2019, வெள்ளிக்கிழமை, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 3,612-க்கு விற்பனை ஆகி வருகிறது. 22 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்துக்கு 28,896 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,940 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. 24 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை 31,520 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications