முரட்டு சரிவில் தங்கம் விலை! 10 கிராமுக்கு 4,050 ரூபாய் வீழ்ச்சி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (24 ஆகஸ்ட் 2020, திங்கட்கிழமை) 55,080 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

மெரினா கடற்கரை கொண்ட சென்னையில், 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று 50,500 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை ஆபரணத் தங்கம் விலை, தன் உச்ச விலையில் இருந்து எவ்வளவு சரிந்து இருக்கிறது? எம் சி எக்ஸ் தங்கம் & வெள்ளி விலை என்ன? சர்வதேச தங்கம் விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒப்பீடு - 24 கேரட்
 

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒப்பீடு - 24 கேரட்

24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 07 ஆகஸ்ட் அன்று 59,130-க்கு விற்றார்கள். இன்று 55,080 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆக 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை இந்த ஒரு சில வாரங்களில் 4,050 ரூபாய் சரிந்து இருக்கிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை ஒப்பீடு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை ஒப்பீடு

22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 07 ஆகஸ்ட் அன்று 54,200-க்கு விற்றார்கள். இன்று 50,500 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆக 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை இந்த ஒரு சில வாரங்களில் 3,700 ரூபாய் சரிந்து இருக்கிறது.

MCX சந்தையில் தங்கம் விலை

MCX சந்தையில் தங்கம் விலை

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை 52,016 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 51,630 ரூபாய் வரை இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 07 ஆகஸ்ட் 2020 உச்ச விலையான 56,191 உடன் ஒப்பிட்டால், 4,561 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

வெள்ளி விலை MCX
 

வெள்ளி விலை MCX

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் சரிந்து இருக்கிறது. கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று 77,949 ரூபாயைத் தொட்டது, செப்டம்பர் மாதத்துக்கான 1 கிலோ எம் சி எக்ஸ் வெள்ளி ஃப்யூச்சர். ஆனால் இன்று அதே எம் சி எக்ஸ் வெள்ளி ஃப்யூச்சர் 66,150 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 77,949 - 66,150 = 11,799 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

ஒரு அவுன்ஸ் இண்டர்நேஷனல் தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் இண்டர்நேஷனல் தங்கம் விலை

சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கான விலை இன்று 1,947 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 06 ஆகஸ்ட் 2020 அன்று அதிகபட்சமாக 2,075 டாலரைத் தொட்டு வர்த்தகமானது சர்வதேச தங்கம். ஆக இந்த சில வாரங்களில் சர்வதேச தங்கத்தின் விலை 128 டாலர் வரை சரிந்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price: 24 carat 10 gm Chennai physical gold price fall rs 4050 from august high

Chennai physical gold price fall around Rs 4,050. Gold price is in down trend in all format of gold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X