கோடிக் கணக்கான மக்களை, தன்னகத்தே கொண்டு வாழ வைக்கும் சென்னையில். 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை நேற்று 54,940 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள்.
ஆக கிராமுக்கு 5,494 ரூபாய் மேனிக்கு, ஒரு பவுன் தங்கத்தை 43,952 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். இது சரித்திரம் காணாத உச்ச விலை.
அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை நேற்று 50,370 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். கிராமுக்கு 5,037 ரூபாய் என்கிற கணக்கில் ஒரு பவுன் தங்கத்தை 40,296 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.
சர்வதேச தங்கம் விலை
ஒரு அவுன்ஸ் தங்கம், சர்வதேச அளவில் இன்று 1,964 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 20 ஜூலை 2020 அன்று 1,817 டாலரில் இருந்த சர்வதேச தங்கம் விலை, தற்போது 1,964 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிறது என்றால், கடந்த 9 நாட்களில் 147 டாலர் அதிகரித்து இருக்கிறது. இனி தங்கத்தின் விலை ஏற்றத்தை பாதிக்கும் காரணங்கள் என்ன?
அமெரிக்க ஃபெடரல் மீட்டிங்
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டம் நிறைவடைந்து என்ன சொல்வார்கள் என இப்போது தங்க முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த ஜூலை 2020-க்கான நுகர்வோர் நம்பிக்கை சர்வே எதிர்பார்த்ததை விட அதிகமாக சரிந்து இருக்கிறது. இது சர்வதேச தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.
கொரோனா + பணவீக்கம்
உலகம் முழுக்க அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை, உலக பொருளாதாரத்தில், ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். அதோடு பல உலக நாடுகளும், நிறைய நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தை மீட்கும் திட்டங்களை அறிவிப்பதால் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம். இவைகள் எல்லாமே தங்க விலை ஏற்றத்தை ஊக்குவிக்கும் முக்கிய விஷயமாக அமைகின்றன.
தங்கத்தில் தொடரும் முதலீடு
ஒரு பக்கம், தங்கம் விலை ஏற பல காரணங்கள் இருக்கும் போது, தங்கத்தில் முதலீடுகளும் குவிந்து கொண்டே தான் இருக்கிறது. உலகத்தின் மிகப் பெரிய தங்க எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டான எஸ் பி டி ஆர் கோல்ட் ட்ரஸ்டின் கையில் 1,243.12 டன் அளவுக்கு தங்கம் இருக்கிறதாம்.
அமெரிக்க தேர்தல்
உலகின் மிகப் பெரிய அரசியல் நிகழ்வுகளில் ஒன்றான அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருக்கிறது. இந்த பிரம்மாண்ட அரசியல் நிகழ்வுக்கு, சுமாராக 100 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அமெரிக்க அரசியல் களம் 100 டிகிரி செல்சியஸில் கொதித்துக் கொண்டு இருக்கிறது. இந்த தேர்தல் செய்திகள் கூட தங்கம் விலை ஏற்றத்துக்கு ஒரு முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு இருக்கிறது.
எம் சி எக்ஸ் தங்கம் விலை
இந்தியாவில், 10 கிராம் தங்கத்துக்கான ஆகஸ்ட் 2020 ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, இன்று காலையில் 52,700 ரூபாயைத் தொட்டு எல்லா முதலீட்டாளர்களையும் மிரள வைத்து இருக்கிறது. தங்க ஃப்யூச்சரிலேயே இந்த அளவுக்கு விலை ஏறுகிறது என்றால், ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரிக்கத் தானே செய்யும், அதான் இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த 14 ஜூலை 2020-ல் 75.42-ல் இருந்து வலு பெற்று, தற்போது 74.74 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் 2020-க்கு முன் இருந்த 72 ரூபாய் லெவல்களுக்கு வரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக சர்வதேச தங்கம் விலை ஏற்றத்துடன், டாலர் ரூபாய் மதிப்பும், இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு பக்க பலமாக இருக்கிறது.
எதிர்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகும்
அமெரிக்க அதிபர் தேர்தல், அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, பணவீக்கப் பிரச்சனை, அமெரிக்க சீன பிரச்சனைகள், பொருளாதாரம் முழுமையாக மீளாத குறை, இந்தியா சீனா பிரச்சனை, 74.75-ல் நிற்கும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தில் குவியும் முதலீடுகள் என எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால், தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications