தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் ரீடைல் சந்தையில் 60000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது மூலம் சாமானிய மக்கள் இனி தங்கத்தை வாங்க முடியுமா என்ற கேள்வி எழும் இதே வேளையில் பலர் தங்கத்தை வைத்து கூடுதலான பணத்தை திரட்டி வருகின்றனர்.
இந்தியாவில் தங்கத்தை வெறும் ஆபரணமாக பார்ப்பவர்களை காட்டிலும் நீண்ட கால முதலீடாகவும், சேமிப்பு கருவியாகவும் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்த நிலையில் தங்கம் விலை உயர்வு பல நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் என்பது தெரிந்தாலும், இந்திய குடும்பங்களின் பல வருட சேமிப்பு அளவு சரிந்துள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.
இதற்கு மத்தியில் பணவீக்கம், பணிநீக்கம் இரண்டும் மக்களை கடுமையாக பாதித்து வரும் நிலையில் தங்கம் விலை உயர்வு புதிதாக தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கையை குறைத்தாலும், பழைய தங்கம் மற்றும் தங்க நகைகள் விற்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் 60000 ரூபாய் தொட்ட நிலையில் இந்தியாவில் பழைய தங்கம் விற்பனை அளவு 25 சதவீதம் அதிகரித்துள்ளது என ஜுவல்லரிஸ் மற்றும் தங்கம் சுத்திகரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்திய பின்பு தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1938 டாலரில் இருந்து 1981 டாலர் வரையில் இன்று உயர்ந்துள்ளது.
தென்னிந்தியா
தென்னிந்தியாவில் சிலர் பழைய தங்கத்தை கொடுத்துவிட்டு புதிய தங்க நகைகளை வாங்குகின்றனர், சிலர் பழைய தங்கத்தை விற்பனை செய்துவிட்டு பணமாக பெறுகின்றனர் என Association of Gold Refineries and Mints-ன் முன்னாள் செயலாளர் ஜேம்ஸ் ரோஸ் தெரிவித்துள்ளார்.
வட இந்தியா
இதேபோல் வட இந்தியாவில் இந்த மாற்றம் முன்கூட்டியே துவங்கியுள்ளது, பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தங்கம் வர்த்தகம் மிகவும் மந்தமாக இருக்கும். பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரிக்காக மக்கள் மத்தியில் பணம் அதிகமாக தேவைப்படும் காரணத்தால் தங்கம் மீதான முதலீடு பெரிய அளவில் குறைந்துள்ளது.
மக்கள்
இதேவேளையில் பழைய தங்கத்தை பணமாக மாற்ற மும்பையில் மிகவும் பிரபலமாக இருக்கும் Zaveri Bazaarல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தங்கம் விலை உயர்ந்த காரணத்தாலும், பண தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாலும் கூடுதலான பணத்தை லாபத்தை பெற பழைய தங்கத்தை விற்பனை செய்து வருவதாக கூறுகின்றனர்.
Gudi Padwa, யுகாதி
இதேபோல் இந்த ஆண்டு தங்கம் விலை அதிகமாக இருந்த காரணத்தால் Gudi Padwa, யுகாதி பண்டிகையின் போது தங்கம் விற்பனை கடந்த வருடத்தை காட்டிலும் சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது என தங்க விற்பனை சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
22 கேரட் தங்கம் விலை
சென்னை - 55,400 ரூபாய்
மும்பை - 54,800 ரூபாய்
டெல்லி - 54,950 ரூபாய்
கொல்கத்தா - 54,800 ரூபாய்
பெங்களூர் - 54,850 ரூபாய்
ஹைதராபாத் - 54,800 ரூபாய்
கேரளா - 54,800 ரூபாய்
புனே - 54,800 ரூபாய்
பரோடா - 54,850 ரூபாய்
அகமதாபாத் - 54,850 ரூபாய்
ஜெய்ப்பூர் - 54,950 ரூபாய்
லக்னோ - 54,950 ரூபாய்
கோயம்புத்தூர் - 55,400 ரூபாய்
மதுரை - 55,400 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
சென்னை - 60,430 ரூபாய்
மும்பை - 59,780 ரூபாய்
டெல்லி - 59,930 ரூபாய்
கொல்கத்தா - 59,780 ரூபாய்
பெங்களூர் - 59,830 ரூபாய்
ஹைதராபாத் - 59,780 ரூபாய்
கேரளா - 59,780 ரூபாய்
புனே - 59,780 ரூபாய்
பரோடா - 59,830 ரூபாய்
அகமதாபாத் - 59,830 ரூபாய்
ஜெய்ப்பூர் - 59,930 ரூபாய்
லக்னோ - 59,930 ரூபாய்
கோயம்புத்தூர் - 60,430 ரூபாய்
மதுரை - 60,430 ரூபாய்
More From GoodReturns

அட்சய திருதியை: தங்கம் Pre- Booking செய்வதால் நமக்கு என்ன லாபம்? Pre- Bookingஇல் கவனிக்க வேண்டியது என்ன?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?



Click it and Unblock the Notifications