தங்கம் விலை திங்கள்கிழமை வர்த்தகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வேகத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (ஃபெட்) வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால், ஆசியச் சந்தை வர்த்தகத்தில் இன்று தங்கம் விலை 2,441 டாலர் அளவீட்டைத் தாண்டி புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவில் ரீடைல் பணவீக்கம் குறையத் துவங்கியுள்ளதை அடுத்து, அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை ஃபெடரல் ரிசர்வ் குறைப்பதற்கான நம்பிக்கை சந்தையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் தங்கம் மீது குவியத் துவங்கியுள்ளது.

சந்தை கணிப்பின் படி இந்த ஆண்டு பெடரல் ரிசர்வ் கிட்டத்தட்ட இரண்டு முறை 0.25 சதவீதம் வட்டி விகிதக் குறைப்பை எதிர்பார்க்கின்றனர், இதில் முதல் வட்டி குறைப்பு நவம்பர் மாதம் துவங்கும் எனவும் கணிக்கப்பட்டது.
இதேவேளையில் சீன மத்திய வங்கி (PBoC) 18வது மாதமாகத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலும் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் அதன் கஜானா-வில் 60,000 ட்ராய் அவுன்ஸ் தங்கத்தைச் சேர்த்துள்ளது. பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு எதிராகப் பாதுகாப்பான முதலீட்டு சொத்தாகச் சீன முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு மாறியுள்ளனர், இன்றைய மார்டன் பொருளாதாரத்தில் சீனா தங்கத்தை அதிகம் சார்ந்து இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் கிங்மேக்கராக இருக்கும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நிலையில், இன்று சர்வதேச சந்தையில் முக்கிய பென்ச்மார்க் எண்ணெய் ஆக இருக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 32 சென்ட் (0.4%) அதிகரித்து $84.30 ஆக உயர்ந்தது. இது மே 10ஆம் தேதிக்குப் பின்பு பதிவான அதிகபட்ச விலையாகும். இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 5 சென்ட் உயர்ந்து 80.11 டாலராக அதிகரித்தது. இது மே 1 ஆம் தேதிக்குப் பின்பு பதிவான அதிகபட்ச விலையாகும்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கும், இந்த நிலையில் தான் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டை நோக்கிக் கொண்டு செல்கின்றனர். இதேபோல் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்தில் இஸ்ரேல் தொடர்பு இருப்பதாக வதந்தி பரவிக்கொண்டு இருக்கும் வேளையில் ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான பிரச்சனை மேலும் பெரியதாக வெடிக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இவை அனைத்தும் தான், இன்று தங்கம் விலை வரலாற்று உச்ச அளவான 2441 டாலர் வரையில் உயர முக்கியமான காரணமாக உள்ளது. மஞ்சள் உலோகத்தின் விலை சாதனை உயரத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிக முக்கியமான காரணமாக உள்ளது.
இதற்கிடையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவும் பதற்றம் அதிகரித்து, பாதுகாப்பான முதலீட்டுத் தளத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் கடந்த வார இறுதியில் மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
தங்கம் விலையில் இந்த ஏற்றம், பங்குச் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு பாதுகாப்பாகச் செயல்படும் என்பதால், முதலீட்டாளர்களிடையே ஈர்ப்பை அதிகரித்துள்ளது. எவ்வாறெனினும், உலகளாவிய பொருளாதார மந்தநிலை கவலைகளும் எரிபொருள் விலை ஏற்றங்களும் தங்கத்தின் விலை எதிர்கால போக்கைப் பாதிக்கும் காரணிகளாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications