Gold Price: உச்சத்திலிருந்து ₹5,900 வீழ்ச்சியில் 10 கிராம் தங்கம் விலை! உருகும் சர்வதேச தங்கம் விலை!

சென்னையில் கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

நேற்று, அதே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை, சென்னையில் 53,230 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. ஆக, ஆபரணத் தங்கம், தன் உச்ச விலையில் இருந்து 5,900 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

கடந்த 03 செப் 2020 அன்று, ஆபரணத் தங்கம் விலை 53,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இது தான் ஆகஸ்ட் உச்சத்துக்குப் பிறகு தங்கம் விலை கண்ட மிகப் பெரிய வீழ்ச்சி.

மேலும் சரியலாம்

மேலும் சரியலாம்

நேற்று 53,230 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இன்று காலையில் இருந்து சர்வதேச தங்க விலை 1,900 டாலரை உடைத்துக் கொண்டு பெரிய வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே மேலும் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சரியலாம் என்கிறார்கள் அன்லிஸ்ட்கள். எம் சி எக்ஸ் தங்கம் விலை நிலவரம் என்ன? சர்வதேச தங்கம் விலை நிலவரம் என்ன? ஏன் தங்கம் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது என இந்த கட்டுரையில் பார்ப்போம்.

MCX Gold price

MCX Gold price

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வர்த்தகமாகும், 05 அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை 382 ரூபாய் சரிந்து (0.76 %) 49,999 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு எம் சி எக்ஸ் தங்கம், இப்படி 50,000 ரூபாய் கீழ் சரிவது இது இரண்டாவது முறை.

ஐந்தே நாளில் 1,825 ரூபாய் காலி

ஐந்தே நாளில் 1,825 ரூபாய் காலி

16 செப் 2020 அன்று 51,824 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்த எம் சி எக்ஸ் தங்கம் விலை, இன்று (23 செப் 2020) 49,999 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 5 வர்த்தக நாளில் 1,825 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. 

MCX Silver price

MCX Silver price

டிசம்பர் 2020 மாதத்துக்கான ஒரு கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை நேற்று ஒரே நாளில் 6,561 ரூபாய் விலை சரிந்தது குறிப்பிடத்தக்கது. இன்று காலை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்து எம் சி எக்ஸ் வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை 1,983 ரூபாய் (3.24 %) விலை சரிந்து 59,230 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் 2020-க்குப் பிறகு வெள்ளி விலை 60,000 ரூபாய்க்குக் கீழ் செல்வது இதுவே முதல் முறை.

வெள்ளி விலை அதோகதி தான்

வெள்ளி விலை அதோகதி தான்

கடந்த 16 செப் 2020 அன்று 68,781 ரூபாய்க்கு எம் சி எக்ஸ் வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை நிறைவடைந்தது. இன்று (23 செப் 2020) 59,230 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக ஐந்தே வர்த்தக நாட்களில் எம் சி எக்ஸ் வெள்ளி விலை 9,551 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

XAU USD-யிலும் செம சரிவு

XAU USD-யிலும் செம சரிவு

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, இன்று1,900 டாலரை விட்டு சரிந்து, 1887 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சர்வதேச தங்கம் விலை, இப்படி 1,900 டாலரை விட்டு கீழே சரிவது, ஆகஸ்ட் 2020-க்குப் பிறகு இதுவே முதல் முறை. ஆகஸ்ட் 2020-ல் உச்சபட்சமாக 2,063 டாலரில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

176 டாலர் பெரு வீழ்ச்சி

176 டாலர் பெரு வீழ்ச்சி

16 செப் 2020 அன்று 1,959 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று 1,887 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்த ஐந்து வர்த்தக நாட்களில் 72 டாலர் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது. ஆகஸ்ட் உச்சமான 2,063 டாலரில் இருந்து இன்றைய விலையை கணக்கிட்டால் 176 டாலர் என்கிற பெரு வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது. சரி ஏன் இவ்வளவு பெரிய சரிவு?

அசுர பலம் பெரும் டாலர் கரன்சி

அசுர பலம் பெரும் டாலர் கரன்சி

யூரோ உட்பட, உலகின் 6 முக்கிய கரன்சிகளுக்கு எதிராக, அமெரிக்க டாலரின் பலத்தைக் காட்டும் அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் (DXY:CUR), கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, இப்போது வரை ஒரு முறை கூட 94 புள்ளிகளைத் தொடவில்லை. ஆனால் இன்று 94.16 புள்ளிகளைத் தொட்டு எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இது தங்கத்தின் விலை ஏற்றத்தை கணிசமாக பாதித்து இருக்கிறது.

டாலர் பாதுகாப்பு

டாலர் பாதுகாப்பு

இத்தனை நாள், பொருளாதார பிரச்சனைகள், கொரோனா வைரஸ், ஜியோ பொலிடிக்கல் பிரச்சனை போன்றவைகளில் இருந்து, தங்கள் பணத்தை பாதுகாக்கும் ஒன்றாக தங்கத்தை பார்த்தார்கள் முதலீட்டாளர்கள். ஆனால் இன்று அந்த பார்வை மாறி இருக்கிறது. முதலீட்டாளர்கள், அமெரிக்க டாலரையும் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிறது லைவ் மிண்ட் பத்திரிகை. இதுவும் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு குறைவு

தங்கத்தில் முதலீடு குறைவு

உலகின் மிகப் பெரிய கோல்ட் ட்ரஸ்டான SPDR Gold Trust-ன் தங்க ஹோல்டிங்ஸ், நேற்று (22 செப் 2020) 0.05 சதவிகிதம் குறைந்து 1,278.23 டன்னாக குறைந்து இருக்கிறதாம். இது பெரிய சரிவு இல்லை என்றாலும், தங்கத்தில் முதலீடுகள் வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

நல்ல சான்ஸ் பாத்துக்குங்க

நல்ல சான்ஸ் பாத்துக்குங்க

அமெரிக்காவின் பொருளாதார பிரச்சனைகளால், அமெரிக்க டாலர் கரன்சி பெரிய அளவில் வலு பெறாது. எனவே, தங்கம் விலை சரிந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், தங்கத்தில் முதலீடுகள் வரலாம் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ் கம்பெனி ரிப்போர்ட்கள். எனவே தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் நச்சென இந்த வாய்பைப் பயன்படுத்திக் கொண்டு முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கு முன், உங்கள் நிதி ஆலோசகர்களையும் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+